ஜி.எஸ்.எல்.வி. எப்-12 ராக்கெட் 29-ந்தேதி விண்ணில் பாய்கிறது என இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எப்-12 ராக்கெட் வருகிற 29-ந்தேதி காலை 10.42 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதில் 2 ஆயிரத்து 232 கிலோ எடை கொண்ட என்.வி.எஸ்.-01 என்ற வழிகாட்டி செயற்கைகோள் புவி ஒத்திசைவு பரிமாற்ற சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படுகிறது. இந்த செயற்கைகோளை உத்தேசித்துள்ள சுற்றுப்பாதைக்கு எடுத்துச் செல்ல அடுத்தடுத்த சுற்றுப்பாதையை உயர்த்தும் நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது.