
இஸ்ரேல் – ஈரான் போர், உக்ரைன் – ரஷ்யா போர் ஆகியவற்றின் பின்னணியில் எந்த நேரமும் மூன்றாம் உலகப் போர் மூளும் என்கிற சூழல் நிலவுவதாக மத்தியச் சாலைப்போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளர்.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் ஒரு நூல் வெளியீட்டு விழாவில் பேசிய அமைச்சர் நிதின் கட்கரி, உலகெங்கும் நாடுகளிடையே தகராறு நிலவுவதாகத் தெரிவித்தார்.
இஸ்ரேல் – ஈரான், உக்ரைன் – ரஷ்யா ஆகியவற்றிடையே போர் நடைபெற்றதைக் குறிப்பிட்டார். இத்தகைய சூழலில் மூன்றாம் உலகப்போர் மூள வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தொழில்நுட்பங்கள் பெருகியுள்ள இக்காலத்தில் போரின் வடிவங்களும் மாறியுள்ளதாகவும், ஏவுகணைகளும் டிரோன்களும் போரில் பயன்படுத்தப்படுவதாகவும் நிதின் கட்கரி தெரிவித்தார்.
போர்களில் மனிதநேயம் குறைந்துவிட்டதாகவும் குடியிருப்புகள் மீது ஏவுகணைகள் வீசித் தாக்கப்படுவதாகவும், இது உலகம் மெதுவாக அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதைக் காட்டுவதாகவும் நிதின் கட்கரி வருத்தம் தெரிவித்தார்.
