
பெங்களூருவும், கொல்கத்தாவும் 2-வது முறையாக மோதுகின்றன. இந்த சீசனில் இரு அணிகள் 2-வது முறையாக மல்லுக்கட்டும் முதல் ஆட்டம் இது தான். ஏற்கனவே கொல்கத்தா ஈடன்கார்டனில் நடந்த மோதலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 81 ரன் வித்தியாசத்தில் பெங்களூருவை பந்தாடியது. அதற்கு சொந்த ஊரில் பழிதீர்க்க பெங்களூரு அணி வரிந்து கட்டுகிறது. பெங்களூரு அணி இதுவரை 7 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 3 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்றிருக்கிறது. அந்த அணியின் கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ்சுக்கு விலாபகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த இரு ஆட்டங்களில் பேட்டிங் செய்து விட்டு 2-வது இன்னிங்சில் மாற்று வீரராக ஓய்வு எடுத்தார். இதனால் விராட் கோலி அணியை வழிநடத்தினார்.