இந்தியாவின் மிகப் பழமையான நகரம் பூம்புகார் ஆராய்ச்சி தகவல்

Advertisements

இந்தியாவின் பழமையான நாகரிகம் ஹரப்பா – மொகஞ்சதாரோ சிந்து சமவெளி
நாகரிகம் என்றும், அவர்கள் விட்டுச் சென்ற சுவடுகள் இன்றளவும் உலக அளவில்
பேசப்பட்டு வருகின்றன. இதே சமயத்தில் தமிழ்நாட்டின் மயிலாடுதுறை
மாவட்டத்தில் அமைந்துள்ள காவிரிப்பூம்பட்டினம் எனும் பூம்புகார்தான் இந்தியாவின்
மிக பழமையான நகரம் என்பதற்கான தகவல்கள் வெளி வந்துள்ளன. சுமார் 2,500
ஆண்டுகள் பழமையான நகரம் பூம்புகார் என நாம் நினைத்துக் கொண்டிருக்கும்
நிலையில், அது 15,000 ஆண்டுகள் பழமையானது என்று சான்றுகள் கூறுகின்றன!
2,500 ஆண்டுகளுக்கு முன்னர், சோழ மன்னர்கள் காலத்தில் நிறுவப்பட்டதாகக்
கருதப்பட்ட இந்த நகரம், இந்தியாவில் மட்டுமின்றி உலகிலேயே பழமையான
துறைமுக நகரமாக இருக்கக்கூடும் என பாரதிதாசன் பல்கலைக்கழகம் நடத்திய
ஆய்வில் தெரியவந்துள்ளது.’நியாட்’ எனப்படும் தேசிய கடல் தொழில்நுட்ப
மையத்தின் உதவியுடன் நடத்தப்பட்ட ஆய்வில், தற்போதைய கடற்கரையில் இருந்து
கடலில் 40 கி.மீ தொலைவில், நீருக்கு அடியில் 50 முதல் 100 மீட்டர் ஆழத்தில்
துறைமுக நகரம் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
இந்த ஆய்வில், கடலுக்கு கீழே 3 மிகப்பெரிய டெல்டாக்களை காவிரி நதி உருவாக்கி
உள்ளதும், இதன் மூலம் அப்போதைய கடற்கரை தற்போதைய கடற்கரையில்

Advertisements

இருந்து 40-50 கி.மீ கிழக்காக இருந்துள்ளதும் தெரியவந்துள்ளது. இது 15 ஆயிரம்
ஆண்டுகள் பழமையான நகரம் என்று தெரிகிறது. இங்கு ஒரே நேரத்தில் 70-க்கும்
மேற்பட்ட கப்பல்கள் நிற்கும் அளவுக்கு மிகப்பெரிய கப்பல் துறைகள், அதைச்
சுற்றிலும் பல விதமான கட்டிடங்களைக் கொண்ட மணலால் மூடப்பட்ட
சுற்றுச்சுவருடன் கூடிய குடியிருப்புகள், அழிந்த நிலையில் அடித்தூண்களுடன்
கலங்கரை விளக்கம் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன.
மேற்கே காவிரியின் வண்டல் பகுதிக்கும், கிழக்கே தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள
பூம்புகாருக்கும் இடையே உள்ள பகுதியில் கடலுக்கு கீழே காவிரியும், அதன் கிளை
நதிகளும் உருவாக்கி உள்ள ஆழமான பள்ளத்தாக்குகளும், பெரிய நீர் வீழ்ச்சியும்
கண்டறியப் பட்டுள்ளது. பருவநிலை மாற்றம் குறித்த அட்டவணைப்படி நடத்திய
ஆய்வில், சுமார் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மயிலாடுதுறை கடற்கரை
நகரமாக இருந்தது தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வில் கண்டறிந்தஉண்மைகள் பூம்புகார் 2,500 ஆண்டுகள் வயது உடையவை
அல்ல என்றும், 15,000 வருடங்களுக்கு முன்பு தற்போது 40 கி.மீ. தூரத்தில்
கண்டுபிடிக்கப்பட்டுள்ள இடத்தில்தான் முதன்முதலில் நிர்மானம் செய்யப்பட்டுள்ளது.
இதுதான் இந்தியாவின் முதல் பழமையான நகரமாக இருக்கலாம் என
தெரியவந்துள்ளது. இவை யாவும் சுனாமி, கடல் மட்ட உயர்வு, வெள்ளம்
போன்றவற்றால் இடம் மாறி வந்த இந்த 3 பூம்புகார்களையும் அழித்து
இருக்கக்கூடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *