‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களின் ஆட்சியர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. முன்னதாக விழுப்புரம் பூந்தோட்டம் நகராட்சி தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். அதன் பின்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், காலை சிற்றுண்டித்திட்டத்தின் செயலாக்கத்திற்குப் பிறகு மாணவர்களின் வருகை அதிகரித்திருப்பதாக ஆசிரியர்கள் கூறியது மகிழ்ச்சி அளித்ததாக தெரிவித்தார்
காலை உணவு திட்டத்தால் மாணவர்கள் வருகை அதிகரிப்பு – அமைச்சர் உதயநிதி
Advertisements