ஆட்டோமொபைல் மற்றும் அதன் பாகங்கள் தயாரிப்பில் நாட்டிலேயே தமிழகம் முதலிடம் வகிக்கிறது என தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலையில் பெட்ரோல், டீசல் கார் மற்றும் எலக்ட்ரிக் கார் உற்பத்தியை அதிகரிக்க ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் தமிழகத்தில் ரூ.20 ஆயிரம் கோடி முதலீடு செய்ய உள்ளது.
இந்நிலையில், இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று கையெழுத்தானது.
அப்போது, நிகழ்சியில் பேசிய முதலமைச்சர் முக.ஸ்டாலின் 1996-ஆம் ஆண்டு ஹூண்டாய் நிறுவனத்தின் முதல் அலகுக்கு அப்போதைய முதல்வா் கருணாநிதி அடிக்கல் நாட்டினாா் என்றும்,
இரண்டாவது தொழிற்சாலையும் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட நிலையில், அந்த நிறுவனத்தின் ஒரு கோடியாவது காரை, 2021-ஆம் ஆண்டு தான் அறிமுகம் செய்து வைத்ததாக பெருமிதம் தெரிவித்தார்.
மேலும், ஆட்டோமொபைல் மற்றும் அதன் பாகங்கள் தயாரிப்பில் நாட்டிலேயே தமிழகம் முதலிடம் வகிக்கிறது என தெரிவித்த அவர், அடுத்த பரிணாம வளா்ச்சியாக, மின்சார வாகனங்கள் தயாரிப்பில் தமிழகம் முன்னணி மாநிலமாக உருவாகியுள்ளது பாராட்டுக்குரியது என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், மின்சார வாகனங்கள் தயாரிப்புக்கான நெடுங்கால முதலீட்டுத் திட்டத்துக்கு, தனது முதன்மைத் தளமாக தமிழ்நாட்டை ஹூண்டாய் நிறுவனம் தோ்வு செய்துள்ளது என முதலமைச்சர் கூறினார்.
இந்நிகழ்சியில், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, தொழிலாளா் நலத் துறை அமைச்சா் சி.வி.கணேசன், தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா, துறையின் கூடுதல் தலைமைச் செயலா் எஸ்.கிருஷ்ணன், தொழில் வழிகாட்டி நிறுவன நிா்வாக இயக்குநா் வே.விஷ்ணு, ஹூண்டாய் மோட்டாா் இந்தியா நிறுவன நிா்வாக இயக்குநா் உன்சூ கிம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.