தெலுங்கானாவில் பாஜக ஆட்சி அமைந்தால் 4 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும்!  அமித்ஷா  பேச்சு….

Advertisements

தெலுங்கானாவில் பாஜக ஆட்சி அமைந்தால் 4 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று அமித்ஷா கூறியுள்ளார்.
 
 தெலுங்கானாவில் இஸ்லாமியர்கள் பிற்படுத்தப்பட்டோராக கருதப்பட்டு அவர்களுக்கு 4 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பேசிய அமித்ஷா, “தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் அரசு, ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசதுத்தீன் ஒவைசியின் கொள்கைகளை நிறைவேற்றி வருவதாக கூறினார்.   மேலும் சந்திரசேகர் ராவ் பிரதமராக வேண்டும் என்ற கனவில் உள்ளதாகவும்,   2024 தேர்தலிலும் அந்த இடத்தை நரேந்திர மோடியே வைத்து இருப்பார் எனவும் தெரிவித்தார்.  இந்நிலையில்  இந்த ஆண்டு தெலுங்கானாவில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் தன்னுடைய இருக்கையில் தக்க வைப்பதில்   சந்திரசேகர் ராவ் கவனம் செலுத்தட்டும் எனவும்,  தெலுங்கானாவில் பாஜக ஆட்சி அமைந்தால் இஸ்லாமியர்களின் 4 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும்” என்றும் அதிரடியாக பேசினார்.
 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *