
நாம் அன்றாடம் வழக்கமாகச் சாப்பிடும் எந்தெந்த உணவுகள் எவ்வளவு நேரங்களில் ஜீரணமாகும் என்பது தெரியுமா உங்களுக்கு?
நாம் குடிக்கும் ஒரு கிளாஸ் பால் ஜீரணமாவதற்கு 4 முதல் 5 மணி நேரமாவது ஆகும்.வேகவைத்த காய்கறிகள், சாப்பிட்ட 40 நிமிடங்களுக்குள் ஜீரணமாகி விடுகின்றன.
நாம் குடிக்கும் தண்ணீர் மற்றும் பழச்சாறுகள் அனைத்தும் நாம் குடித்த 20 முதல் 30 நிமிடங்களுக்குள்ளாகவே ஜீரணமாகிவிடும். தண்ணீர் கூட ஜீரமடையுமா என்று நீங்கள் கேட்கலாம். நிச்சயமாக. நாம் குடிக்கும் தண்ணீர் கிட்டதட்ட 30 நிமிடங்கள் வரை எடுத்துக் கொள்கின்றன.
சிறு தானியங்களில் அதிக அளவில் நார்ச்சத்துக்கள் நிறைந்திருப்பதனால் அது ஜீரணிக்க நேரம் அதிகம் எடுக்கும். சிறு தானியங்கள் ஜீரணமாவதற்குக் கிட்டதட்ட 90 நிமிடங்கள் (ஒன்றரை மணி நேரம்) எடுத்துக் கொள்கிறது.
பீட்ரூட் ஜீரணமடைவதற்கு 50 நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறதாம். காலிபிளவர் நாம் சாப்பிட்டு 45 நிமிடங்களுக்குள்ளாக ஜீரணமடைந்து விடுகிறது.அசைவ உணவுகளிலேயே மிக வேகமாகவும் எளிதாகவும் ஜீரணமடையக்கூடிய உணவு என்றால் அது மீன்தான். மீன் நாம் சாப்பிட்டு 45 முதல் 60 நிமிடங்கள் (அதாவது சாப்பிட்ட ஒரு மணி நேரத்துக்குள்ளாக) ஜீரணமடையும்.
நாம் சாப்பிடும் வாழைப்பழம், ஆப்பிள் போன்ற பழங்கள் சாப்பிட்ட 20 முதல் 30 நிமிடங்களுக்குள்ளாகவே ஜீரணமாகிவிடுகிறதாம். அரிசியோ கோதுமையோ சாப்பிட்டு 3 மணி நேரம் வரை ஆகிறது.

முட்டை ஜீரணமடைய 2 மணி நேரம் ஆகும். சிக்கன் இரவு நேரங்களில் ஜீரணமடைவதற்கு ஒன்றரை முதல் இரண்டு மணி நேரம் வரை எடுத்துக் கொள்கிறது.சிக்கன் ஜீரணமடைவதற்கு எடுத்துக் கொள்ளும் அதே நேரம்தான் உருளைக்கிழங்கு ஜீரணமடையவும் எடுத்துக் கொள்கிறது. பச்சையாகச் சாப்பிடும் கேரட் கிட்டதட்ட 50 நிமிடங்கள் ஆகுமாம்
பொதுவாக ஆரஞ்சு மற்றும் மற்ற சிட்ரஸ் பழங்கள் வெகு விரைவில் ஜீரணமாகிவிடும். அதிகபட்சமாக அரை மணி நேரத்திற்குள்ளாகவே ஆரஞ்சு மற்றும் மற்ற சிட்ரஸ் பழங்கள் ஜீரணமடைந்துவிடும்.முந்திரி, பாதாம், பிஸ்தா போன்ற கொட்டை வகைகள் ஜீரணமடைய மிக மிக அதிக நேரங்கள் எடுத்துக் கொள்கின்றன. கிட்டதட்ட மூன்று மணி நேரம் ஆகும் அவை ஜீரணமாக.
மட்டன், மாட்டிறைச்சி போன்ற இறைச்சி வகைகள் ஜீரணிக்க கிட்டதட்ட 3 மணி நேரங்களுக்கும் மேலாக எடுத்துக் கொள்கின்றன.

