வீட்டு வைத்தியம் – 25 ‘சபாஷ்’ மருத்துவ குறிப்புகள்

Advertisements

பாட்டி வைத்தியம் என்பது நமது பரம்பரைச் சொத்து. அது பற்றி நாம் அறிந்து வைத்திருப்பதும், பிறருக்கு
எடுத்துச் சொல்வதும் நமது கடமை மட்டுமல்ல! நமது தேக ஆரோக்கியத்திற்கும்தான்!

Advertisements
  • தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுட வைத்து, ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி
    குணமாகும்.
  • ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில்
    பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
  • நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.
  • ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து
    வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.
  • வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். வயிற்றுப்புண்
    நீங்கும்.
  • வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.
  • கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில்
    தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.
    8.வெந்தயத்தை ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க்கால்களில் தடவி, நன்கு ஊறியபின்
    அலசினால் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.
  • வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும். அல்லது
    கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.
  • சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம்
    குணமாகி பசி ஏற்படும்.
  • சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால்
    இடுப்புவலி நீங்கும்.
  • விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத
    புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகி விடும்.
  • சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி
    தீரும்.
  • தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போட்டு, வடிகட்டி குடித்து வர
    வாயுத் தொல்லை அகலும்.
  • வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால்
    நினைவாற்றல் பெருகும்.
  • அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து
    உட்கொண்டால் குணமாகும்.
  • எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை
    நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.
  • வயிற்றுப்புண்: பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண்
    குணமாகும்.
  • கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல
    அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.
  • தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.
  • வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி,
    கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் ரத்தக்கொதிப்பு,
    கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.
  • சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத்
    தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். சுளுக்கு விட்டு விடும்.
  • அருகம்புல் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும்
  • உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில்
    அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.
  • நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து
    வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *