இமாச்சலப் பிரதேசத்தில் 2,500 பேருந்துகள் போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.
ஊதிய உயர்வு,ஓவர்டைம் ஊதியம் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் பணிக்கு வரமாட்டோம் என்று தெரிவித்துள்ளனர்.
நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தைத் தொடங்குவதாக தொழிலாளர்கள் சங்கங்கள் அறிவித்துள்ளது.
மொத்தம் 3300 பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் பெரும்பாலான பேருந்துகள் வேலை நிறுத்தம் காரணமாக இயங்கவில்லை என கூறப்பட்டுள்ளது.இதனைதொடர்ந்து, சுமார் 8 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.
Hii gem tv