காஞ்சிபுரம் மாவட்டம், ஆலந்தூர் தெற்கு பகுதி திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, நங்கநல்லூரில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. 12வது மண்டல குழு தலைவர் சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமை குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு துவக்கி வைத்தார். இதில், பொது மருத்துவம், குழந்தைகள் மருத்துவம், மார்பக புற்றுநோய், சிறுநீரக நோய் மற்றும் கண் மருத்துவ உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து, சிகிச்சை பெற்றவர்களுக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் சத்து பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்கினார். பின்னர், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மருத்துவமுகாமை பார்வையிட்டார். அப்போது, 167 வது வட்ட செயலாளர் நடராஜன் மற்றும் மாமன்ற உறுப்பினர் துர்காதேவி நடராஜன், திமுக நிர்வாகிகள் இப்ராகிம், சீனிவாசன், ஆகியோர் உட்பட ஏராளமனோர் உடனிருந்தனர்.
நங்கநல்லூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் இலவச மருத்துவமுகாமை அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கி வைத்தார்
Advertisements