
தவறான சிகிச்சையால் பிரசவத்தின்போது இளம்பெண் உயிரிழந்தாரென உறவினர்கள் கதறி அழுத படி மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை, ராயபுரத்தில் உள்ள அரசு மகப்பேறு RSRM மருத்துவமனையில் பிரசவத்திற்கு வந்த பெண்ணிற்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் இறந்ததாகக் கூறி உறவினர்கள் முற்றுகையிட்டனர்.
சென்னை: வியாசர்பாடி சேர்ந்தவர் சௌந்தர் என்பவரின் மனைவி சௌந்தர்யா வயது 26 கடந்த ஆறாம் தேதி சௌந்தர்யா தனது இரண்டாவது பிரசவத்திற்காகச் சென்னை ராயபுரம் ஆர் எஸ் ஆர் எம்மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அன்று அவருக்கு அறுவை சிகிச்சைமூலம் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இந்த நிலையில் சௌந்தர்யாவின் உடல்நிலை சீராக இல்லாததால் தொடர்ந்து மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை காலைப் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனை மருத்துவமனை தரப்பிலிருந்து உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர்.
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் சௌந்தர்யாவிற்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் அவர் உயிர் இறந்தார் என்றும் தொடர்ந்து தவறான சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் தவறான தகவல்களைத் தெரிவித்ததால் சௌந்தர்யா உயிரிழந்ததாக மருத்துவமனையை முற்றுகையிட்டனர். மருத்துவமனையில் உள்ள காவல் நிலையத்தில் காவல்துறையினர் முற்றுகையிட்டவர்களை சமாதானம் செய்து வருகின்றனர். இதனால் மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

