எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் அதில் ஒரு சிறிய தொகையை, யாரிடம் கடன்
வாங்கினீர்களோ அவர்களுக்கு செவ்வாய்க் கிழமை செவ்வாய் ஹோரையில்
திருப்பிக் கொடுங்கள். உங்களுக்கு இருக்கக் கூடிய கடன் அதன் பின்பு படிப்படியாக
வெகு சீக்கிரத்தில் குறைய ஆரம்பிக்கும்.
இதேபோல் சூரிய கிரகணம் சந்திர கிரகணம் வரும் போது குறிப்பிட்ட அந்த
நேரத்தில் உங்களுடைய கடன் தொகையை திருப்பிக் கொடுத்தாலும், கடன்
பிரச்சனையில் இருந்து விடுபட முடியும் என்றுகிறது சாஸ்திரம்.
சனிக்கிழமையும் பிரதோஷமும் சேர்ந்து வரக்கூடிய நாளன்றும் கடன் தொகையை
திருப்பிக் கொடுக்கும் பட்சத்தில் நம்முடைய கடன் பிரச்சனை படிப்படியாகக்
குறையும்.
செவ்வாய்க்கிழமையும் நவமி திதியும் சேர்ந்து வரும் நாளில் உங்களுடைய கடன்
தொகையை திருப்பிக் கொடுத்து வந்தாலும் கடன் படிப்படியாக குறையும். அது
மட்டுமல்ல, மீண்டும் கடன் வாங்கும் சூழ்நிலையும் வராது.