இப்போதெல்லாம் உணவு முறைகள் ரொம்பவே மாறி விட்டன.பழைய சத்தான உணவு வகைகளை மறந்து… பரோட்டா. பிரியாணி, பீட்சா என வாய்க்கு ருசியை மட்டுமே பார்த்து சாப்பிடத் தொடங்கி விட்டனர். தமிழர்கள் மறந்து போன உணவு வகைகளில் முக்கியமான ஒன்று முருங்கைக்காய். அந்தக் காலத்தில் தெருவுக்கு 4 முருங்கை மரம் இருக்கும். தெருக்களில் மட்டுமல்லாது வீடுகளின் பின்புறத்திலும் முருங்கை மரம் இருக்கும்.வீட்டுக்கு வீடு முக்கிய தினங்கள் மட்டுமல்லாது அடிக்கடி ‘அவியல்’ வைப்பார்கள் முருங்கைக்காய் மட்டுமல்ல, முருங்கைக் கீரையையும் அதிகம் உபயோகிப்பார்கள்.
இதற்கிடையே தமிழர்களின் ஆண்மை பற்றிய ஒரு ரகசிய கணக்கெடுப்பு நமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.சமீப காலமாக தமிழகத்தில் ஆண்மைக்குறைவும், மலட்டுத் தன்மையும் அதிகமாகிக் கொண்டே வருவதாக ஆய்வுகள் சொல்லுகின்றன. தமிழக ஆண்களின் இன்ப உணர்வுகள் குறைந்து கொண்டிருப்பதாக ஆய்வுகள் நம்மை எச்சரிக்கின்றன. இதில் அதிர்ச்சிகரமான தகவல் என்னவென்றால் இளம் வயது மற்றும் நடுத்தர வயதை நெருங்கும் ஆண்கள் பலருக்கு ஆண்மை குறைவு மற்றும் இதர பாலியல் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுகின்றனவாம்..
இதற்கு காரணம் பெரும்பாலான குடும்பங்களில் “முருங்கை”யை மறந்து போய் விட்டார்கள். முருங்கையில் பாலை விட இரண்டு மடங்கு புரதச்சத்து, நான்கு மடங்கு கால்சியம், ஏழு ஆரஞ்சுப்பழத்தில் உள்ள வைட்டமின் பி, மூன்று வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம், கடல் பாசியை விட மூன்று மடங்கு இரும்புச்சத்து, கேரட்டை விட நான்கு மடங்கு வைட்டமின் ஏ ஆகியவை அடங்கியுள்ளது.
முருங்கைக்காயில் ‘ஜிங்க்’ சத்து அதிகம் உள்ளது. முருங்கைக்காயை தொடர்ந்து சாப்பிடும் ஆண்களுக்கு பாலுணர்ச்சி தூண்டப்படுவதோடு, மலட்டுத்தன்மை பிரச்சனைகளும் தீருகின்றன. இது தவிர முருங்கைக்காயில் எலும்புகளுக்கு தேவையான வைட்டமின் சத்துகள் அதிகம் நிறைந்துள்ளது.
முருங்கைக்காயில் இருக்கும் வேதிப்பொருட்கள் நீரிழிவு நோய்களுக்கு எதிராக இன்சுலின் போல செயல்பட்டு, ரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது. இதனால் நீரிழிவு பிரச்சனை கொண்டவர்களுக்கு நன்மையை உண்டாக்கும் ஒரு இயற்கை உணவாக முருங்கைக்காய் இருக்கிறது. கர்ப்பிணி பெண்கள் முருங்கைக்காய் அதிகம் உணவில் சேர்த்து உண்பதால் கருவில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு பேருதவி புரிகிறது. முருங்கை கீரை மற்றும் முருங்கைக்காய் மூலம் நாம் பெறும் நோய் எதிர்ப்பு சக்தி அளவற்றது. எனவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை முருங்கையை தேவையான அளவு உபயோகியுங்கள்.