உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமை இடமாக திகழ்கிறது இத்தாலி நாட்டின் ரோமில் உள்ள வாடிகன் நகர் .121 ஏக்கர் பரப்பளவு மட்டுமே கொண்ட வாடிகன் நகரில் போப்பாண்டவரின் அரண்மனை இருக்கிறது
இங்குள்ள திருச்சபை ஒன்றாம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது. அது முதல் உலகளாவிய அரசியல் தலைவராகவும் ,ஆன்மீக தலைவராகவும் போப்பாண்டவர் இருந்து வருகிறார் .கடந்த 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13ஆம் தேதி போப் பிரான்சிஸ் போப்பாண்டவராக பொறுப்பேற்றார் .
இந்த நிலையில் வருகிற அக்டோபர் மாதம் வாடிகன் நகரில் உலக ஆயர்களின் மாமன்ற கூட்டம் நடைபெற இருக்கிறது .இந்த மாமன்ற கூட்டத்தில் அனைவரும் தங்களது பரிந்துரையை சமர்ப்பிப்பார்கள். இதனை ஆய்வு செய்து போப்பாண்டவர் பின்னர் அறிக்கையாக வெளியிடுவார் .இது ஒரு முக்கிய நிகழ்வாகும்.
இந்த நிலையில் உலக ஆயர்களின் மாமன்ற கூட்டத்தில் இதுவரை பெண்கள் அனுமதிக்கப்பட்டதில்லை
முதல் முதலாக இந்த மாமன்ற கூட்டத்தில் பெண்கள் கலந்து கொள்ளலாம். அவர்கள் வாக்களிக்கவும் செய்யலாம் என போப்பாண்டவர் பிரான்சிஸ் உத்தரவிட்டிருக்கிறார். அவரது வேண்டுகோளின் படி இந்த ஆண்டு நடைபெற இருக்கும் ஆயர்கள் மாமன்ற கூட்டத்தில் முதன் முதலாக 70 பெண்கள் பங்கு பெறுகிறார்கள் என்பது முக்கிய தகவலாகும்.