அமெரிக்கா முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் என்னை டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் வைத்து பாலியல் வன்முறை வன்கொடுமை செய்தார் என பிரபல பெண் எழுத்தாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த விவகாரம் உலகம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அமெரிக்காவின் பிரபல பெண் எழுத்தாளர் இ ஜின் கரோல். இவர் அமெரிக்க நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்து உள்ளார் .அந்த வழக்கு மனுவில் அவர் கூறி இருப்பதாவது: 1990 ஆம் ஆண்டில் மன் ஹாட்டனில் உள்ள ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்பை சந்தித்தேன்
பெண்களுக்கு உள்ளாடை எப்படி எடுக்க வேண்டும் என அவர் என்னிடம் விளையாட்டாக கேட்டார். நானும் அவரிடம் விளையாட்டாக பதில் கூறினேன் .இந்த நிலையில் அங்குள்ள ட்ரெஸ்ஸிங் அறையில் என்னை உள்ளே தள்ளி அவர் பாலியல் வன்கொடுமை செய்தார். இதனை என்னால் வெளியே சொல்ல முடியவில்லை .ஆனால் கடந்த 2019 ஆம் ஆண்டில் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் இது பற்றி பேட்டி அளித்தேன்
பின்னர் எனக்கு பல மிரட்டல்கள் இருந்தன. இதனால் நான் பயந்து போயிருந்தேன்
ஆனால் இப்போது நான் யோசிக்கிறேன் .இது மிகவும் வெட்கக்கேடான செயல். இதை வெளி உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும் என்ற முடிவெடுத்து நீதிமன்றத்தில் இந்த வழக்கை தொடர்ந்து இருக்கிறேன். அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருக்கிறார் .
இந்த வழக்கில் ட்ரம்ஸ் சார்பாக வாதிட்ட வழக்கறிஞர் இது தவறான புகாராகும். அவர் ஒரு பிரபலமானவர் என்பதற்காகவே இந்த புகாரை சொல்கிறார்கள். எனவே இதை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் .இது குறித்து நீதிமன்றம் விசாரணை செய்த பிறகு நடவடிக்கை எடுக்கும் என தெரிகிறது.
இதற்கிடையே முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது இதுபோன்று12 பெண்கள் குற்றச்சாட்டு சுமத்தி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.