வாழப்பாடி அருகே, காவல்துறை அதிகாரி போல் உடை அணிந்து கொண்டு, பணம் வசூலித்த நபரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே பாப்பான் ஏரி பகுதியில், தனி நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வருபவர்களை நிறுத்தி, பணம் வசூலிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அங்கு காவலர் சீருடையில் இருந்த கடம்பூர் பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவரை, காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இவர் ஆத்தூர் பகுதியில் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டதும், ஏற்கனவே இவர் மீது வழக்கு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.