Advertisements

ஆசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை இஷா சிங் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.
டெல்லியில் உள்ள கர்னிசிங் ரேஞ்சில் ஆசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது. இந்தப் போட்டியில், 20 நாடுகளைச் சேர்ந்த 311 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதில், பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பந்தயத்தின் இறுதிப் போட்டி நடைபெற்றது. போட்டியில், மிகவும் சிறப்பாக விளையாடிய இந்திய வீராங்கனை இஷா சிங் 239 புள்ளிகளில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை வென்றார்.
Advertisements



