அமைச்சராக பொருப்பேற்க இருக்கும் டி.ஆர்.பி.ராஜா முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவி ஏற்று 2 ஆண்டுகளை நிறைவு செய்து, 3-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் தமிழக அமைச்சரவையில் 3 மாற்றங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்துள்ளார். இந்நிலையில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த நாசர் அமைச்சரவையில் இருந்து தற்போது நீக்கப்பட்டுள்ளார். அவர் மீது அரசியல் ரீதியாக பல்வேறு குற்றச்சாட்டுகள் வந்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
மேலும், அமைச்சரவையில் புதிய அமைச்சராக டி.ஆர்.பி.ராஜா சேர்க்கப்பட்டுள்ளார். அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டி.ஆர்.பி. ராஜா தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மகன் ஆவார். இதையடுத்து டி.ஆர்.பி. ராஜா நாளை காலை 10.30 மணிக்கு கிண்டியில் உள்ள ராஜ்பவனில் இருக்கும் தர்பார் அரங்கில் அமைச்சராக பதவி ஏற்றுக்கொள்கிறார். இதற்கிடையில் நாளை அமைச்சராக பதவியேற்கவுள்ள டி.ஆர்.பி.ராஜா முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்