உலகில் எப்பேர்ப்பட்ட தோல்வியையும் தாங்கிக் கொள்ளலாம் .ஆனால் ஒரு காதலி
ஏமாற்றி விட்டுப் போனால் அதைத் தாங்கிக் கொள்வது அவ்வளவு சுலபம் அல்ல .காதல்
தோல்வியின் வலி காதலர்களுக்குத்தான் தெரியும் .உலகில் ஏராளமான காதல்
தோல்விகள் தற்கொலையை சந்தித்திருக்கின்றன.
காதல் தோல்வி ஏற்பட்ட போது இதயம் நொறுங்குவது போல் உணர்ந்திருக்கிறீர்களா?
கட்டுப்படுத்த முடியாத வகையில் அழுகை பீறிட்டதா? இந்த உலகமே தலைகீழாக
மாறியது போல் உணர்ந்தீர்களா? ஏதோ ஒன்று உங்களை வெகுவாக பாதித்தது போல்
ஸ்தம்பித்து போனீர்களா? இதுவெல்லாம் ஏன் நடந்தது, எப்படி நடந்தது?
இதற்கெல்லாம் விடை தெரிய வேண்டுமென்றால், முதலில் உங்கள் உடலுக்குள் என்ன
நடக்கிறது என்பது குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
காதல் தோல்வி ஏன் மனிதர்களை வெகுவாக பாதிக்கிறது என்பது குறித்து ஸ்டான்போர்ட்
யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆப் மெடிசின்ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.
மனிதர்கள் காதலில் இருக்கும்போது அவர்களுடைய மூளையில் மகிழ்ச்சியை
அளிக்கக்கூடிய “டொபமைன்”என்னும் ரசாயனம் அதிகமாக சுரப்பதாக அந்த ஆய்வில்
தெரிய வந்துள்ளது.
நம்முடைய உணர்வுகளை தீர்மானிப்பதில் இந்த டொபமைன்களுக்கு மிகப்பெரும்
பங்குகள் இருக்கின்றன. நமது உடலில் டொபமைனின் அளவு அதிகமாக இருந்தால், நாம்
மிகவும் உற்சாகமான மனநிலையில் இருப்போம்.
”நம்முடைய உடல் அதனுடைய வலிகளை தாங்கக்கூடிய சக்தியை தீர்மானிப்பதிலும்
இந்த டொபமைன்களின் பங்கு இருப்பதாக” ஸ்டான்போர்ட் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆப்
மெடிசின் நடத்திய ஆய்வில் தற்போது தெரியவந்துள்ளது.
ப்ரோக்கன் ஹாராட் சின்ட்ரோம் என்னும் ஒரு நிலையினால்தான் காதல்
தோல்வியின்போது நம்முடைய இதயம் கனத்து, நெஞ்சுவலி ஏற்படுகிறது. இதுவொரு
தீவிரமான இதய நோய் போன்றது. பொதுவாக இது பெண்களிடம் மிக அதிகமாக
காணப்படுகிறது. இதுபோன்ற சின்ட்ரோம் மூலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில்
அனுமதிக்கப்படும் 90 சதவீத மக்கள் பெண்களாகத்தான் இருக்கிறார்கள். காரணம்,
பெண்கள் மிக எளிதாக உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள்!
ப்ரோக்கன் ஹார்ட் சின்ரோம் -ஆல் பாதிக்கப்படுபவர்களின் மூளை செயல்பாடுகள்
பாதிக்கப்பட்டு மெதுவாக சோர்வடைகின்றன. இது அவர்களுடைய உடலின்
செயல்பாடுகளையும் பாதிக்கிறது” என்று செலினா விவரிக்கிறார்.
”இதற்கு முன்னதாக ப்ரோக்கன் ஹார்ட் சின்ரோம் குறித்து பெரிதாக யாருக்கும்
விழிப்புணர்வு இல்லை. ஆனால் தற்போது சூழ்நிலைகள் மாறி வருகின்றன. இதற்கான
மருத்துவ தீர்வும் ஒருநாள் கண்டுபிடிக்கப்படும்” என்றும் அவர் நம்பிக்கை தெரிவிக்கிறார்.
ப்ரோக்கன் ஹார்ட் சின்ரோம் ஏற்பட்டால் என்ன நடக்கும்?
ப்ரோக்கன் ஹார்ட் சின்ரோம் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் அவர்களுடைய
இதய செயல்பாட்டில் மாற்றங்கள் நடக்கிறது. அவர்களின் இதயம் இயல்பிலிருந்து சற்று
வேறுபட்டு இயங்க துவங்குகிறது.
1990 ஆம் ஆண்டு ஜப்பானில்தான், முதன்முதலாக ப்ரோக்கேன் ஹார்ட் சின்ரோம்
கண்டறியப்பட்டது. இது குறித்து நோயாளிகளிடம் ஆய்வு செய்த மருத்துவர்கள், இந்த
பாதிப்பு ஏற்படும்போது அவர்கள் மாரடைப்பு ஏற்படுவது போல் உணர்வதாக
தெரிவித்தனர். ஆனால் அதேசமயம், அவர்களுடைய இதயத்தின் இரத்தக்குழாயில்
எந்தவொரு அடைப்பும் கண்டறியப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதில் நிறைய பேர், ஓரிரு வாரங்களிலோ, நாட்களிலோ தங்களுடைய பாதிப்பிலிருந்து
மீண்டுவிடுகின்றனர். ஆனால் சிலர் மரணம் வரை சென்றுவிடுகின்றனர்.
மனநல நிபுணர் காய் இதுகுறித்து கூறும்போது, “காதல் தோல்வியை சந்திப்பவர்களின்
மூளையில் மாற்றங்கள் ஏற்பட துவங்குகிறது” என்று குறிப்பிடுகிறார்.
மூளைகளில் ஏற்படும் மாற்றங்களால்தான் அவர்களுடைய உடல் இறுக்கம் அடைகிறது.
அது வலியை இன்னும் தீவிரப்படுத்துகிறது. இதனால் அவர்கள் தங்களுடைய
பாதிப்பிலிருந்து மீண்டு வருவதற்கு தாமதம் ஏற்படுகிறது” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
”காதல் என்பது ஒரு போதை. நீங்கள் காதலிக்கும்போது அதன் ஒவ்வொரு நினைவுகளும்
உங்கள் மூளையில் பதிவாகி வரும். அதன் காரணமாகத்தான் நீங்கள் அதில்
தோல்வியடையும்போது மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கிறது”
என்றும் காய் கூறுகிறார்.
நாம் தலைவலி ஏற்பட்டால் மாத்திரை எடுத்து கொள்கிறோம். அது சரியாகவில்லை
என்றால் மருத்துவரை சந்திக்கிறோம். அதேபோல் காதல் தோல்வி அடைந்து, அதில் மீள
முடியவில்லையென்றால் மனநல நிபுணர்களை சந்திக்க வேண்டுமென மருத்துவர்கள்
வலியுறுத்துகிறார்கள். அதுவே நம்முடைய பிரச்னைக்கு தீர்வாக இருக்கும்.