பூமியில் பிறந்த அனைவரும் ஒருநாள் நிச்சயமாக மரணத்தை சந்தித்துதான் ஆக
வேண்டும். மனிதர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கும் மிகப்பெரிய கசப்பான உண்மை இது.
மரணம் என்பது பூமியில் இருக்கும் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வருவதால்
மக்கள் அனைவரும் மரணத்தை நினைத்துப் பயப்படுகிறார்கள்.
ஒருவர் வாழும் வரைதான் எல்லாப் புகழும்…பெருமையும்…மகிழ்ச்சியும்..?
இறந்துவிட்டால் அவர் மரணமடைந்தார், காலம் கடந்துவிட்டார், சிவலோக
பதவியடைந்தார், இயற்கை எய்தினார், காலாவதியாகிவிட்டார்,செத்து விட்டார்
என்பார்கள். வாழும் பொழுது ஒவ்வொருவருக்கும் ஒரு பெயர் இருக்கிறது. ஆனால்
மரணமடைந்து விட்டால் எல்லோருக்கும் ஒரே பெயர்தான். ‘பாடி’ அல்லது ‘பிணம்’
என்பார்கள்.
இறப்புக்குப் பின் என்னவாகும்? சொர்க்கமா? நரகமா? உண்மையில் அவை
இருக்கிறதா? எம கிங்கரர்கள் வந்து நம்மை அழைத்துப் போவார்களா? எமதர்மன்
நம்மை ‘இண்டர்வியூ’ செய்வாரா?. சொர்க்கத்தில் ரதி, ரம்பை, திலோத்தமை எல்லாம்
உண்டா? இவைகளுக்கு எல்லாம் நேரடியான பதில் இல்லை என்றாலும், மரணம்
தொடர்பாக நடந்த பல ஆராய்ச்சிகள் பற்றியும், இறப்புக்கு அருகில் சென்று வந்த சில
மனிதர்களின் அனுபவங்கள் பற்றியும் இங்கு நாம் அறியப் போகிறோம். நிச்சயம் இது
உங்களுக்கு ஒரு ‘திகில்’ அனுபவமாகத்தான் இருக்கும்.
மூளை செயல் இழந்தால் உடலும் அழியும். அதோடு நினைவுகளும் செத்துப்
போகின்றன. எனவே, மரணத்துக்குப் பின் வாழ்க்கை இல்லை என்பதுதான்
அனைவறியும் அறிந்த விஷயம். ஆனால். நமது புராணங்கள் மனிதனுக்கு மறு
பிறவி உண்டு என்கிறது.
உலகம் முழுவதும் சராசரியாக ஒரு நாளைக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் பல்வேறு
வகைகளில் மரணிக்கிறார்கள் எனக் கணக்கெடுத்து வைத்திருக்கிறார்கள்
ஆய்வாளர்கள்.. இவற்றில் மூன்றில் இரண்டு சதவீதம் பேர் வயது மூப்படைதலால்
மரணமடைகிறார்களாம்.அதாவது தினமும் 1 லட்சம் பேர் இயற்கை மரணத்தை
தழுவுகிறார்கள்.
ஒருவர் மரணிக்கும் போது என்ன நடக்கிறது..? ஒருவர் மரண வாயிலில் இருக்கும்
போது சில நிகழ்வுகள் வெளியே தெரியாத படிக்கு நடக்குமாம். அதாவது
இறக்கப்போகிற நபர் அறையில் இல்லாத சிலருடன் பேசுவாராம். அவர் யாருடன்
பேசுவார்..?. ஏற்கெனவே இறந்த அவரது மூதாதையர்கள்தான் அந்த அறைக்குள்
வந்து இன்னும் சற்று நேரத்தில் சாகப் போகிறவரிடம் பேசிக் கொண்டிருப்பார்களாம்..
உடலில் இருந்து ஆன்மா புறப்பட்டபின் அவரது ஆவிக்கு வழிகாட்டும் பொருட்டு
அவர்கள் பேசுவார்களாம்.
ஐம்புலன்களும் அடங்க ஆரம்பிக்கும் அந்த மரண தருணத்தில் ஒரு வித்தியாசமான
ரீங்கார ஒலி சாகப் போகிறவரின் காதுகளில் கேட்கும். அது கேட்பதற்கு
இனிமையாக இருக்காது. ஒருவித அசாதாரண ஒலியாக இருக்கும். மரணிக்கும்
போது உடல் முழுவதும் சற்று வலி ஏற்படும். ஆனால் மரணம் ஏற்பட்டவுடன் அந்த
ஆவிக்கு வலி எதுவும் தெரியாமல் மாறாக ஒரு வித பேரமைதி கிடைக்கும்.
ஒருவர் இறந்த பின் 3 நிமிடங்கள் வரை அவருக்கு நினைவுகள் இருக்கும் என
இங்கிலாந்தை சேர்ந்த சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள்
கண்டறிந்துள்ளனர். அந்த 3 நிமிடங்கள் வரை தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள்
குறித்த நினைவுகள் அவனுக்கு இருக்கும் எனவும் ஒரு மனிதனின் இதயத் துடிப்பு
நின்ற 20 முதல் 30 விநாடிகள் கழித்துதான் அவனது மூளை செயல்பாட்டை
இழக்கும் எனவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
மனிதன் இறந்தபின் ஆவிதான் பிரிந்து செல்லுமே தவிர அவனது ஜீரண உறுப்புகள்
தொடர்ந்து 24 மணி நேரம் வரை செயல்படும் அவனது எலும்பு தொடர்ந்து 4
நாட்களை வரை செயல்படும். தோல் 5 நாட்கள் வரை பணி செய்யும். கண் மற்றும்
காது தொடர்ந்து 6 மணி நேரம் வேலை செய்கிறது. தசைகள் ஒரு மணி நேரம்
செயல்படுகிறது. அவனது சிறுநீரகம் 6 மணி நேரம் செயல்படுகிறது. ஆக அவனது
உயிர் பிரிந்தாலும் அவனது உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் உடனடியாக
நிறுத்தப்படுவதில்லை.
இது மட்டுமல்ல..ஒரு மனிதன் இறந்த பிறகும் அவனது உடலில் செல்கள்
உருவாவது தொடர்ந்து கொண்டே இருக்கும். அவனது தலைமுடியின்
வேர்ப்பகுதியில் புதுப்புது செல்கள் உருவாகி தலைமுடி வளர்ந்து கொண்டே
இருக்கும் என்பது அறிவியல் உண்மையாகும்..
மரணத்திற்குப் பின் என்ன நடக்கும்? என்பதை கருட புராணமும்
சொல்லியிருக்கிறது.மரணம் ஏற்பட்ட பின், ஜீவன் எமலோகம் செல்கிறது. மனிதன்
வாழும் பூமிக்கும் எமலோகத்துக்கும் உள்ள தூரம் 80 ஆயிரம் காத தூரம் ஆகும். அங்கு
எமதர்மன் இருப்பான். அவனுக்கு தூதுவர்களும் உண்டு.
எமனும், தூதுவர்களும் கறுப்பு நிற ஆடைகள் உடுத்தி இருப்பார்கள். முகத்தில்
கோபக்கணலை உடையவர்களாக இருப்பார்கள். இந்த எமதூதர்கள் ஒருவனது ஆயுள்
முடிந்தவுடன் அவனை சூட்சும உருவத்தில் எமன் முன்பு கொண்டு வந்து நிறுத்துவார்கள்.
சூட்சும உருவில் உள்ள அந்த உயிர், தன் உடல் வைக்கப்பட்டிருக்கும் இடம் அல்லது
சுடுகாட்டுக்குச் செல்லும் போது தன் உடலுக்குள் மீண்டும் நுழைவதற்கு முயற்சிகள்
செய்யும். ஆனால் முடியாமல் தவிக்கும். இந்த சமயத்தில் தனது உடலுக்கு உற்றார் தீ
வைக்கும் போது, சிதைக்கு சுமார் பத்து முழ உயரத்தில் ஆவி வடிவில் நின்று ஓலமிட்டு
அழும். இந்தச் சத்தம் மனிதர்களுக்கு கேட்காது.
ஒருவருடைய ஆன்மா தன்னுடைய உடலை விட்டுவிட்டால் அது தனது 13ம் நாளில்
தன்னுடைய பழைய கணக்கை முடித்துவிட்டு தன்னுடைய பாவ, புண்ணியத்தின்
கணக்கின் படி இன்னொரு தாயின் கர்ப்பத்திற்கு சென்றுவிடும்..
துர்மரணம் அடைந்த ஆன்மா நிறைவேறாத ஆசையுடன் மனித ஆவி உடலில்
சுற்றிக்கொண்டிருக்கும் அது தன்னுடைய விருப்பங்களையும்.. ஆசைகளையும்
யாரிடமாவது சொல்ல நினைக்கும், ஆனால்..அதனால் முடியாது, பலவீனமான உடலில்
பிரவேசித்து அது தன்னுடைய ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள
முனையும்..அதைத்தான் மனிதர்கள் பேய்,பிசாசு என்று சொல்கின்றனர்..ஆன்மாவின்
ஆவி பரிசுத்த வெண்மையாகவும் தீய ஆன்மாவின் ஆவி பயங்கர கருப்பாகவும்
இருக்கும்..
இதற்கிடையே ஒருவர் மரணமடையப்போவதை முன்னதாகவே அறிய முடியுமா?
என்ற கேள்விக்கும் விடை இருக்கிறது. பொதுவாக நம்மை சுற்றியிருக்கும்
பறவைகளுக்கும், மிருகங்களுக்கும் நம்முடைய மரணம் முன்கூட்டியே தெரியும்
என்கிறார்கள்.இரவில், நோய்வாய்ப்பட்ட நபர் ஒருவரின் படுக்கையில் கருப்பு பூனை
வந்து நிற்பது அவரது மரணத்தின் அறிகுறியாகும். மேலும் மரங்கொத்திப் பறவை
வீட்டைத் தட்டுவதும், வீட்டிற்குள் ஒரு வவ்வால் பறந்து வெளியேறுவதும்
மரணத்தின் அறிகுறிகளாகும்.பகல் நேரத்தில் ஒரு ஆந்தையைக் கண்டால் அது
உங்களுக்கு நெருக்கமான ஒருவரின் மரணத்தின் அறிகுறியாகும்.இதே போல்
நாய்களுக்கு ஒருவரின் மரணத்தை முன்கூட்டியே அறியும் ஆற்றல் உண்டு என்று
நம்பப்படுகிறது. வீட்டில் உள்ள நாய் தொடர்ந்து ஜன்னலுக்கு அருகில்
ஊளையிடுகிறது என்றால், அந்தக் குடும்பத்தில் ஒரு மரணம் நடக்கப் போகிறது
எனப் பொருளாகும். .
மரணம் என்பது மனிதர்களுக்கு கடவுள் எழுதிய விதி. காலம் உள்ள வரை அந்த
ரகசியத்தை யாராலும் உடைக்க முடியாது..மரண பயணம் என்பது தடுக்க முடியாத
ஒரு தொடர்கதையே ஆகும்.