
மிகவும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியாக காத்திருக்கும் மாமன்னன் திரைப்படத்தை பற்றி தான் சமூக ஊடகங்களில் தீயாய் பேசப்பட்டு வருகிறது.மாமன்னன் இசை வெளியிட்டு விழாவில் கமல் ஹாசன்,சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்கள்,முன்னணி இயக்குனர்கள் என தமிழ் சினிமாவின் 80% சதவீத திரையுலகமே மாமன்னன் இசை வெளியிட்டு விழாவிற்கு வருகை தந்ததென்றே குறிப்பிடலாம்.இப்படி கோலாகலமாக முடிந்த மாமன்னன் இசைவெளியீட்டு விழாவை பற்றி தான் விவாத களமாக மாறியுள்ளது.
அதற்க்கு காரணம் மாமன்னன் திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழாவில் இயக்குனர் மாரி செல்வராஜ் உரை தான் காரணம்.

இயக்குனர் மாரிசெல்வராஜ் மேடையில் கமல் ஹாசன் முன்பு தேவர்மகன் படம் பற்றி வைத்த விமர்சனம்,பேசும் பொருளாக அமைந்துள்ளது.”நான் எடுத்த மூன்று படங்களை எடுப்பதற்கு முன்பும் தேவர்மகன் படம் பார்த்து விட்டு தான் எடுத்தேன்.காரணம் தேவர்மகன் படம் என்னை மிகவும் பாதித்தது.
தேவர்மகன் படத்தின் தாக்கம் பல நாட்கள் கடக்க முடியாமல் தவித்தேன்.தேவர்மகன் எனக்கு பெரிய மன திறழ்வுகள் ஏற்படுத்தியது.தேவர்மகனில் வரும் இசக்கி கதாபாத்திரம் தான் இந்த மாமன்னன் என்று மாரின் உரை தான் இன்று பெரும் உரையாடலை ஏற்படுத்தியுள்ளது.

இதனை தொடர்ந்து கமல் ரசிகர்கள் கொந்தளித்தது இன்னொரு பக்கம் இருந்தாலும் மாரி செல்வாராஜிற்கு ஆதரவாக சில திரை விமர்சகர்களும் சமூக ஆர்வளர்களும் முன் வருகின்றனர்.இப்படி ஆதரவும் எதிர்ப்புமாக செல்கின்ற நேரத்தில் டிஜிட்டல் ஊடகம் ஒன்றில் இயக்குனர் மாரிசெல்வராஜ் தன் மீது எழுகின்ற விமர்சனங்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்.”எனது உரையில் நான் தெளிவாக இருக்கின்றேன் தேவர்மகன் படம் என்னை மிகவும் பாதித்தது.தேவர்மகன் படத்தின் தாக்கம் பல நாட்கள் கடக்க முடியாமல் தவித்தேன்.தேவர்மகன் எனக்கு பெரிய மன திறழ்வுகள் ஏற்படுத்தியது உண்மைதான்.உலகம் வியக்கும் கலைஞன் கமல் ஹாசன் அவர் முன்னனிலையில் பேசியது உரிமையாக கருதுகிறேன்,மாமன்னன்
திரைப்படத்தை கமல்ஹாஸன் அவர் மட்டுமே பார்த்துள்ளார்,நான் எடுத்த 2 படங்களை பார்த்து பாராட்டியுள்ளார்,இந்தமுறை மாமன்னன் பார்த்து விட்டு இது நமக்கான அரசியல் என்றார்.நான் பேசி அன்று இரவும் இதை தான் அவர் குறிப்பிட்டார்.நான் பேசியதை புரியாதோர்க்கு சில நாட்களோ சில ஆண்களோ கழித்து புரியும்.நான் உரையாற்றிய அன்று இரவு நான் கொண்டாடினேன் என்றும் குறிப்பிட்டார்

