
தாஜ்மஹால் யாரால் கட்டப்பட்டது? உண்மை கண்டறிய தொல்லியல் துறைக்கு டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவு!
யமுனை ஆற்றங்கரையில் 42 ஏக்கர் நிலப்பரப்பில் 400 வருடங்களுக்கு முன்னாள் கட்டப்பட்ட தாஜ்மஹால் உலகின் எட்டு அதிசயங்களில் ஒன்று.
தாஜ்மஹாலைக் கட்டியது ஷாஜகான் அல்ல ராஜாமான்சிங் தான் கட்டினார் என்று மனு தாக்கல் செய்திருந்த நிலையில் டில்லி உயர்நீதிமன்றம் தொல்லியல் துறைக்கு உண்மையைக் கண்டறிய உத்தரவு பிறப்பித்துள்ளது. முகலாய பேரரசர் ஷாஜகானால் தாஜ்மஹால் கட்டப்பட்டது என்று வரலாறு பாடத்தில் படித்திருப்போம். ஆனால் சேனா தலைவர் சுர்ஜித் சிங் யாதவ் தாக்கல் செய்த மனுவில் தாஜ்மஹாலைக் கட்டியவர் ராஜா மான்சிங் என்பவர்.
ராஜா மான்சிங்கின் அரண்மனியாக இருந்த தாஜ்மஹாலை, ஷாஜகான் புதுப்பித்தார் அதன் பிறகு அவரது மனைவியின் கல்லறையாக மாற்றப்பட்டது. எனவே வரலாற்றுப் புத்தகத்தில் இருந்து ஷாஜகான் பெயரை நீக்க வேண்டும் என்றும் இது குறித்து தொல்லியல் துறை ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டு இருந்ததையடுத்து டில்லி உயர் நீதிமன்றம் தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
டில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் சதிஷ் சந்திரசர்மா,துசார்ரான் கெடலா ஆகியோர் அடங்கிய அமர்வு தொல்லியல் துறைக்கு ஆராய்ச்சி செய்யும்படி உத்தரவிட்டுள்ளது.

