
வங்க கடலில் உருவாகியுள்ள மோக்கா புயலால், தமிழகத்திற்கு பாதிப்பு இருக்காது என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, அந்தமானில் இருந்து, 530 கி.மீ. துாரத்தில், புயல் சின்னமாக மையம் கொண்டுள்ளது. இன்று தீவிர புயலாகவும், பின்னர் நள்ளிரவில் அதிதீவிர புயலாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது, வடக்கு, வடகிழக்கு திசையில் திரும்பி, வரும் 13ம் தேதி வலுவிழக்கும். அதை தொடர்ந்து, 14ம் தேதி தென் கிழக்கு, வங்க தேசம் மற்றும் வடக்கு மியான்மர் பகுதிகளில் கரையை கடக்கும். இன்று முதல் வங்க கடலில் காற்றின் வேகம் படிப்படியா அதிகரிக்கும் என்றும், மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் சூறாவளி வீசும் என்றும்,
எனவே, மீனவர்கள் வரும் 14ம் தேதி வரை, இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று கூறப்படுகிறது. இந்த புயல் நேரடியாக, தமிழகம், ஆந்திராவுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்றும், அதே நேரம், சில இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் வெப்ப நிலை அதிகரிப்பும் ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
