ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் இன்று இரவு 7.30மணிக்கு நடைபெறும் 55வது லீக் போட்டியில் சென்னைசூப்பர் கிங்ஸ்-டெல்லி கேபிட்டல்ஸ் மோதுகின்றன. 2வது இடத்தில் உள்ள சிஎஸ்கே இன்று வென்றால் கிட்டத்தட்ட பிளே ஆப் வாய்ப்பை இறுதி செய்யலாம். மறுபுறம் கடைசி இடத்தில் உள்ள டெல்லி தோல்வி அடைந்தால் பிளே ஆப் வாய்ப்பு பறிபோய் விடும்.
எனவே கட்டாய வெற்றி நெருக்கடியில் களம் இறங்குகிறது. இரு அணிகளும் இதுவரை 27 முறை மோதி உள்ளன. இதில் 17ல் சிஎஸ்கே, 10ல் டெல்லி வென்றுள்ளது. சேப்பாக்கத்தில் இரு அணிகளும் இதுவரை 8 போட்டியில் மோதியதில், 6ல் சிஎஸ்கே வென்றுள்ளது. நடப்பு தொடரில் சேப்பாக்கத்தில் சிஎஸ்கே இதுவரை ஆடி உள்ள 5 போட்டியில் 3ல் வென்றுள்ளது.