சென்னை கலாசேத்ரா கல்லூரி விவகாரம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள குழுவில் கலாசேத்ரா அறக்கட்டளை இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன் இடம் பெறக்கூடாது என கூறி, சென்னை நீதிமன்றத்தில் 7 மாணவிகள் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில், ‘பாலியல் புகார் அளித்த மாணவிகளுக்கு மற்றும் மாணவிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட ஆசிரியர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும், பாலியல் தொல்லை அளித்தவர்கள் வளாகத்திற்குள் நுழைய கூடாது என்றும் குறிப்பிட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி, பாலியல் குற்றச்சாட்டு குறித்து அமைக்கப்பட்டுள்ள விசாரணை குழுவை ஏன் மாற்றி அமைக்கக்கூடாது?’ என்று கேள்வி எழுப்பி விளக்கம் அளிக்கும்படி கலாசேத்ரா அறக்கட்டளைக்கு உத்தரவு பிறப்பித்தார்.
பாலியல் தொல்லைகளை தடுக்க விரிவான கொள்கைகளை வகுக்க வேண்டும்-சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
Advertisements