சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றுப் போட்டியில் தமிழக வீராங்கனை மாயா வெற்றி பெற்று சாதனைப் படைத்துள்ளார்.
நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. மைதானத்தில் சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றுப் போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டியில் இந்தியாவின் தமிழக வீராங்கனை மாயா ராஜேஷ்வரன் ரேவதி, போலந்தின் வெரோனிகா பால்கோவ்ஸ்கா உடன் மோதினார்.
இதில், மிகவும் அதிரடியாக விளையாடிய தமிழக வீராங்கனை மாயா 6-4, 6-3 என்ற நேர் செட்டில் கணக்கில் போலந்தின் வெரோனிகா பால்கோவ்ஸ்காவை வீழ்த்தி வெற்றி பெற்று காலிறுதிச் சுற்றுப் போட்டிக்கு முன்னேறினார்..
மேலும் இந்த வெற்றியின் மூலம் 2012ஆம் ஆண்டு சானியா மிர்சாவுக்குப் பிறகு டபிள்யூ.டி.ஏ. டூர் டென்னிஸ் தொடரில் காலிறுதிச் சுற்றுப் போட்டியை எட்டிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை மாயா பெற்றுள்ளார்..


