
2005 ஆம் ஆண்டு பி. வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஜோதிகா, பிரபு, வடிவேலு, நாசர், சோனு சூத் போன்ற பெரும் நட்சத்திர பட்டாளமே நடிச்சு சுமார் 1 வருடத்துக்கும் மேல ஓடி வசூல் வேட்டை நடத்திய படம் சந்திரமுகி. சுமார் ₹70 கோடிகளை அந்த நாளிலேயே அள்ளிய படம் இதுனு சொல்லலாம். ரஜினி அவர்களோடே கேரியர் best படம் அப்படினு சொன்னாலும் அது மிகையாகாது.
சமீப காலமா பார்ட் 2 சீசன் ஆ இருக்கு. பல பிளாக் பஸ்டர் படங்கள் பார்ட் 2 க்களா எடுக்கப்பட்டு வருது. ஆனா, அதுல ஒரு சில படங்கள் தான் நினைச்ச அளவுக்கு வெற்றியா அடையுது.
அப்படி, சந்திரமுகி 2 ஓட announcement சென்ற வருடம் வெளியான நிலையில, ரசிகர்கள் எப்போ படம் ரீலீஸ் ஆக போதுதுனு ரொம்பவே excited ஆ இருக்காங்க. என்ன அப்படினா இந்த படத்தோட ஸ்டார் cast அப்படி.

ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், ராதிகா சரத்குமார், வடிவேலு, போன்ற பெரும் நட்சத்திரங்கள் படத்துல இருக்காங்க. இது போக ஆஸ்கர் அவார்ட் இசையமைப்பாளர் கீரவாணி, கைதேர்ந்த கலை வடிவமைப்பாளர் தோட்டாதரணி போன்ற பலர் இருக்காங்க. லைக்கா ஓட பிரம்மாண்ட தயாரிப்பில் இந்த படத்தோட 90 சதவீத ஷூட்டிங் ஓவர். இன்னும் 10 சதவீத ஷூட்டிங் ஒரே schedule ல முடிச்சி படத்த வரும் செப்டம்பர் மாசம் விநாயகர் சதுர்த்தி பண்டிகை time ல கொண்டு வர படக்குழு பிளான் பண்ணி இருக்காங்க.
பாக்கலம் சந்திரமுகி பார்ட் 2 எந்த மாதிரி ரெகார்ட்ஸ் ஆ எல்லாம் தகர்க்க போகுது அப்படினு.
