
மத்திய அரசு புதிதாக தனியார் ரேஷன் கடை திட்டத்தை கொண்டுவர விரும்புகிறது.
ஒரு மாவட்டத்திற்கு 75 கடைகள் என்ற அடிப்படையில் தனியார் ரேஷன் கடைகள்
வரப்போகிறது நாடு முழுவதும் 4 கோடியே 99 லட்சம் ரேஷன் கடைகள் இயங்கி
வருகின்றன.
தமிழ்நாட்டில் 35 ஆயிரத்து 323 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த
கடைகள் வாயிலாக பொது விநியோகத் திட்டத்தின்கீழ், அரிசி, சீனி , கோதுமை,
மண்ணெண்ணெய், பாமாயில், துவரம்பருப்பு உள்ளிட்டவை குறைந்த விலையில்
வழங்கப்படுகின்றன. இதுதவிர சோப்பு முதுல் உப்பு வரை பல பொருட்கள்
நியாயமான விலையில் வழங்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 2 கோடி
ரேஷன் அட்டைதாரர்கள் இதன் மூலம் பயன்பெற்று வருகிறார்கள்.
தற்போது உள்ள ரேஷன் கடைகளில் அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களே
பயன்பெற்று வருகிறார்கள். அதேநேரம் வெளிமாநிலத்தவர், புலம் பெயர்ந்தவர்கள்
பயன்பெறும் வகையில், ‘ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு, ஒரே ரேஷன் திட்டம்’ என்ற
திட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. அந்த திட்டத்தின்படி
எங்கே சென்றாலும், அந்தந்த மாநில அரசின் ரேஷன் கடைகளில் பொருட்களை
பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. அந்த திட்டம் நடைமுறைக்கும்
வந்துவிட்டது.
இந்நிலையில் அந்த திட்டத்தின் நீட்சியாக தனியார் ரேஷன் கடைகளை திறக்க
மத்திய அரசு முன்வந்துள்ளது. ஒரு மாவட்டத்திற்கு 75 கடைகள் என்ற
அடிப்படையில் தனியாரால் நியாய விலைக்கடைகள் திறக்கப்பட உள்ளதாக
தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்து மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு
சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
இந்தத் திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் டீலர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
இந்த தனியார் ரேஷன் கடைக்கும், அந்தந்த மாநிலஅரசுகள் நடத்தும் பொது
விநியோகத் திட்ட ரேஷன் கடைகளுக்கு எந்த சம்பந்தம் இல்லை. பொது விநியோகத்
திட்டத்தில் வழங்கப்படும் எந்தவிதமான இலவசப் பொருளும் இந்த தனியார் ரேஷன்
கடையில் வழங்கப்படாது. அதே நேரம் தனியார் ரேஷன் கடையில் பொருள் வாங்க
சென்றாலும் ரேஷன் அட்டை எடுத்துச்சென்றதால் மட்டுமே பொருளை பெற
முடியும். தனியார் டீலர்கள் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள்
தங்களது மாவட்டங்களில் 75 கடைகள் திறக்கத் தேவையான இட வசதிகளை செய்து
தர வேண்டும்.
தனியார் டீலர் என்ற அடிப்படையில் அமைக்கப்படும் ரேஷன் கடைகளில்
பொதுமக்கள் காத்திருப்பதற்கான அறைகள், சிசிடிவி கேமரா வசதிகள், டாய்லெட்
வசதி, குடிநீர் வசதி, பாதுகாப்பு அம்சங்கள் இருக்க வேண்டும். இந்தத் தொழில்
மூலம் மாதம் ரூபாய் 50,000 வரை பொருளீட்ட முடியும்” இந்த திட்டம்
செயல்பாட்டுக்கு வரும் போது ஒவ்வொரு மாவட்டத்திலும் இதற்கான டீசலர்ஷிப்பை
இளைஞர்கள் எடுத்து மாதம் 50ஆயிரம் வருமானம் ஈட்டலாம் என்று கூறப்படுகிறது.
