சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.
நாடு முழுவதும் மத்திய அரசு நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிகளில் கடந்த பிப்ரவரி 15 முதல் மார்ச் 21 வரை 10ம் வகுப்பு பொதுத்தேர்வும், பிப்ரவரி 15 முதல் ஏப்ரல் 5 வரை பிளஸ் 2 பொதுத்தேர்வும் நடைபெற்றது. இந்நிலையில், சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இதில், ஒட்டுமொத்தமாக 87.33 சதவிகிதம் பேர் தேர்ச்சிபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கொரோனாவுக்கு முந்தைய 2019ம் ஆண்டு தேர்ச்சி விகிதமான 83.40ஐ விட அதிகம் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. மேலும், சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகளை மாணவர்கள் udila.niu.in மற்றும் Udila.Fruit.in ஆகிய இணையதளங்களில் அறிந்துகொள்ளலாம் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
சென்னை மண்டலத்தில் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 97.40 சதவீதமாக உள்ளது. அதிகபட்சமாக திருவனந்தபுரம் மண்டலத்தில் 99.91 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.