உன்னால்தான் முடியுமா…? என்னாலும் முடியும்..!

Advertisements

“நோக்கம் எதுவென்பதை முதலில் தீர்மானி…அதுவே இலக்கு என்பதை உறுதி செய்து கொள்..கையில் பணமில்லையே.. உடலில் வலுவில்லையே…உதவி செய்ய நண்பர்கள் இல்லையே…என்றெல்லாம் யோசித்து நேரத்தை வீணாக்காதே..எதற்கும் பயப்படாதே..தயங்காதே..இலக்கை நோக்கி அடியெடுத்து வை.. தொடர்ந்து முன்னேறு.சோதனைகள் விலகும்…பாதை தெளிவாகும்…நோக்கத்தை அடைந்தே தீருவாய்…அதை யாராலும் தடுக்க முடியாது..’ என்கிறார் “சுவாமி விவேகானந்தர்.”
இன்றைய கால கட்டத்தில் கோடிப்பணம் எல்லாம், வெறும் தெருக்கோடி தூரம்தான். 20 ஆண்டுகளுக்கு முன் ஒருவர் ரூ.5 ஆயிரம் சம்பாதித்தாலே பெரிய விஷயம். இப்போதுள்ள 20 வயதுப் பசங்களுக்கு அந்தப் பணமெல்லாம் கால் தூசுக்கு சமம். இப்படி இருக்க, இனிமேலும் கோடீஸ்வரான ஆக முடியாமல் என்ன வாழ்க்கை?

Advertisements


ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள்.இந்த உலகில் பணத்துக்கு மட்டும் எப்போதுமே பற்றாக்குறை வருவதில்லை. பணத்தைப் பற்றிய நம் எண்ணங்களுக்குத்தான் பற்றாக்குறை அதிகம். கல்லூரிகளில் படிக்கும் போதே, ரூ.10,000 வரை பகுதி நேர வேலையில் சம்பாதிக்க வழி உள்ள இந்தக் காலத்தில், எவரும் கோடீஸ்வரான் ஆக முடியும்.
எல்லா வயதினருக்கும் ‘பணம்’ ஒரு அழகான மற்றும் கவர்ச்சிகாமான ‘காதலி’. இவளைப் பின்தொடர்ந்து சென்று எட்டிப் பிடித்து, கட்டுக் கட்டாக வீட்டு பீரோவில் அடுக்கி வைப்பது மாதிரி சுகம் வேறு எதிலும் கிடையாது. எனவே பணத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள். இதுவும் பெண் போலத்தான். இந்தக் காதலியை நீங்கள் வேண்டும் என்று நினைத்தால் அது உங்களுடன் ஒட்டிக் கொள்ளும். நீங்கள் உதறினால், அதுவும் உங்களை உதறிவிடும்.


எப்போதும் ஏழையாகவோ அல்லது போதும் என்ற மனத்துடனோ இருக்கக் கூடாது. விரைவில் பணக்காரனாக வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் மேலோங்கி இருக்க வேண்டும். பணத்திற்குக் காலமோ, நேரமோ, விடுமுறையோ கிடையாது. நீங்களும் அதுபோலத்தான் இருக்க வேண்டும். நல்ல உழைப்பு இருப்பவனை எப்போதுமே பணம் விரும்பும். நீங்கள் பணக்காரனாகும் போது உங்களைப் பெற்றவர்களையும், மற்றவர்களையும் நீங்கள் சந்தோசமாக வைத்துக் கொள்ள முடியும். இந்தக் கலிகாலத்தில் பணம்தான் எல்லோரையும் ஆட்டிப் படைக்கிறது என்பது உங்களுக்கு தெரியாததல்ல.


எல்லோருக்குமே கோடீஸ்வரர் ஆகும் ஆசை இருக்கிறது. அவகர்ளில் நீங்களும் ஒருவர் ஆகி விட முடியுமா..? முடியும்! ஏற்கெனவே இருக்கும் கோடீஸ்வரர்கள் எல்லாம் பிறக்கும்போதே அப்படி பிறக்கவில்லை! ஆகவே… நீங்களும் தாராளமாக கோடீஸ்வர்களில் ஒருவர் ஆகி விட முடியும்.
சிம்லா ஓட்டலில் மாதம் ரூ.50 சம்பளத்தில் குமாஸ்தாவாக வேலை பார்த்து, படிப்படியாக உயர்ந்து உலகம் முழுவதும் தனக்குச் சொந்தமாக ஏகப்பட்ட ஓட்டல்களை உருவாக்கிக்கொண்டார் எம்.எஸ்.ஓபராய்.
ஆரம்பக்கல்வி கற்கக்கூட  வழி இல்லாத ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர்கள் ரைட் சகோதரர்கள்,. இறந்த மிருகங்களின் எலும்புகளைப் பொறுக்கி எடுத்து உரத்தொழிற்சாலையில் விற்றுக் காசு சம்பாதித்தார்கள்.பின்னர் சைக்கிள் ரிப்பேர் செய்யும் கடை ஆரம்பித்தனர். இவர்கள்தான் பறக்கும் விமானத்தைக் கண்டுபிடித்தனர்.
உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி ஐசக் நியூட்டன், ஆரம்பத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தவர். மாடுகளை மேய்ச்சலுக்கு இட்டுச் சென்று அவற்றை எங்கேயாவது போக விட்டுவிட்டு புத்தகங்களைப் படிப்பதும் சிறிய சாமான்களை வைத்துக்கொண்டு சோதனை செய்வதும்தான் அவர் வேலையாக இருந்தது.


தாமஸ் ஆல்வா எடிசன், இளம் வயதில் வயிற்றுப் பிழைப்புக்காக காய்கறிகளை வண்டியிலேற்றி நகரம் எங்கும் விற்பனை செய்தவர். தனது கண்டு பிடிப்புகளில் 3 ஆயிரம் முறைக்கும் தோல்விகளை சந்தித்தவர்.
அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ரூஸ்வெல்ட், தனது இளமைக் காலத்தில் செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை பார்த்தவர்.
நீங்கள் கோடீஸ்வரன் ஆவதற்கு, உங்களுக்கென ஒரு ரோல் மாடலைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் எப்படியெல்லாம் தங்கள் வாழ்க்கையில் முன்னேறி, செல்வந்தர்கள் ஆனார்கள் என்பதைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
எப்போதுமே பெரிய அளவில் நாம் சிந்திக்க வேண்டும். 30 வயதுக்குள் கோடீஸ்வரனாகிவிட வேண்டும் என்ற முனைப்புடன் செயல்படுங்கள். அப்போதுதான், 50 வயதிலாவது கோடீஸ்வரன் ஆக முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *