பொடுகு தொல்லையை  போக்கும்   சித்த மருத்துவம்..!   

Advertisements

                                                                                               
                        ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலையை நன்கு அரைக்கவும். இதனுடன், சிறிது ஊறவைத்த வெந்தயத்தைச் சேர்த்துக்கொள்ளலாம். அரைத்த விழுதைத் தலைமுடியில் நன்கு பரப்பி, இரண்டு மணி நேரம் வரை ஊறவிட வேண்டும். பின்னர், வெதுவெதுப்பான நீரைக்கொண்டு, தலையை நன்கு கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்துவந்தால், முடி இயற்கையாகவே, வலிமை அடைவதுடன், அடர்கறுப்பு நிறத்திலும் மிருதுவாகவும் இருக்கும்.     கறிவேப்பிலை, கருஞ்சீரகம், வெந்தயத்தை சேர்த்து நன்கு அரைத்து விழுதாகிக் கொள்ள வேண்டும். வேப்ப இலைகளையும் சேர்த்துக்கொள்ளவும். இந்த விழுதை வழக்கமாக உபயோகிக்கும் தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து உபயோகிக்கலாம். இதை, தலையில் தேய்த்து எட்டு மணி நேரம் கழித்து, ஷாம்பூ அல்லது சிகைக்காய் போட்டுக் கழுவி, சுத்தம் செய்ய வேண்டும். இதனால் முடி உதிர்வைத் தடுப்பதுடன், தலைமுடியைப் பளபளப்பாக வைத்துக்கொள்ளலாம். பொடுகுப் பிரச்னையும் தீரும்.    

Advertisements

               

இன்றைய காலகட்டத்தில் ஆண், பெண் இருவரும் கவலை கொள்ளும் விஷயம் பொடுகு தொல்லை. இயற்கை முறையில் பொடுகு தொல்லையை போக்க பல்வேறு சித்த மருத்துவ முறைகள் உள்ளன. அவற்றை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.    வாதம் அதிகமாக இருந்தால் பொடுகு உண்டாகும். இதனால், முடியின் வேர்ப்பகுதியில் வெடிப்பு ஏற்படும். 500 மி.லி தேங்காய் எண்ணெயில் 100 மி.லி அறுகம்புல் சாறு, அதிமதுரம் கலந்து செய்யப்படுவது அறுகன் தைலம்.    இதைத் தலையில் தடவி, அரை மணி நேரம் ஊறவைத்துக் குளித்துவந்தால், பொடுகுத் தொல்லை நீங்கும். இது, அனைத்துச் சித்த மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். * வேப்பிலையில் வைரஸ், பாக்டீரியா ஒவ்வாமைகளுக்கு எதிராகச் செயல்படும் தன்மை உள்ளது.                                            
                        வேப்பிலையை ஒரு கப் நீரில் போட்டு, நீர் பாதியாக வற்றும் வரை நன்கு கொதிக்கவிட்டு, அந்த நீரைக்கொண்டு வாரம் ஒரு முறை தலை முடியை அலச, பொடுகு, அழுக்கு அனைத்தும் வெளியேறி, தலை சுத்தமாக இருக்கும்.  கடுக்காய், நெல்லிக்காய், வேப்பங்கொட்டை, கஸ்தூரி மஞ்சள், வெள்ளை மிளகைச் சம அளவு எடுத்துக்கொண்டு, இரவு தண்ணீரில் ஊறவைத்து, அடுத்த நாள் அரைக்க வேண்டும். இதற்கு, ‘பஞ்சகல்பம்’ என்று பெயர்.      இதை மிதமான சூடுகொண்ட பசும்பாலில் கலந்து, தலையில் தடவ வேண்டும். அரை மணி நேரம் ஊறிய பின்னர், சிகைக்காய் போட்டுத் தலைக்குக் குளிக்க வேண்டும். இதனால், பொடுக்குத் தொல்லை நீங்கும். உடல் வெப்பம் தணியும்.  கசகசா, தேங்காய், பாதாம் பருப்பு, குறைந்த அளவில் சீரகம், மிளகு ஆகியவற்றை இரவு, தண்ணீரில் ஊறவைத்து, காலையில் அரைத்து, பாலில் கலந்து தலைக்குத் தடவினால் முடி வறட்சி நீங்கும். பொடுகுத் தொல்லை நீங்கும்.          

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *