சென்னையில் விசிக நிர்வாகி படுகொலை – கொலையாளிக்கு போலீசார் வலை வீச்சு

Advertisements

சென்னை கே.கே.நகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ரமேஷ் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். காரில் வந்த இரண்டு நபர்கள் ரமேஷை சரமாரியாக வெட்டி சாய்த்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர். இன்று அதிகாலை தேநீர் கடைக்கு சென்ற போது இந்த பயங்கர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த போலீசார், நேரில் பார்வையிட்டு ரமேஷின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக எம்.ஜி.ஆர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பியோடிய கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது கொலை உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *