அண்ணாமலையார் திருக்கோவிலில், அம்மனுக்கு பொம்மை பூ கொட்டும் நிகழ்வு வெகு விமர்சியாக நடைபெற்றது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் 10 நாட்கள் சித்திரை வசந்த உற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு சித்திரை வசந்த உற்சவத்தின் முதல் நாளான நேற்று அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமலை அம்மனுக்கு, சிறப்பு அபிஷேக தீபாராதனை நடைபெற்றது. இதனைதொடர்ந்து, மகிழ மரத்தை சுற்றி பத்து முறை அண்ணாமலையார் உண்ணாமலையம்மன் வெட்டிவேர் பல்லக்கில் எழுந்தருளி சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். பின்னர், பொம்மை பூ கொட்டும் நிகழ்வு நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.