இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் இந்தியா முழுவதும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற காத்திருக்கிறது .
இந்த தேர்தலில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு பரபரப்பை சந்திக்க காத்திருக்கிறது தமிழ்நாடு .காரணம் பாரதிய ஜனதா கட்சி மயிர் கூச்செறியும் காட்சிகளை நிறைவேற்ற தயாராக இருக்கிறது.
இந்த சண்டைக் காட்சியின் கதாநாயகன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. இவர் பொறுப்பேற்றது முதலே தமிழக அரசியல் ரொம்பவே சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. திமுகவா ?அதிமுகவா? என்ற வழக்கமான போராட்ட சூழ்நிலை மாறி ,பாஜகவும் ஒரு மல்யுத்த வீரனாக களம் இறங்கி இருக்கிறது
இந்த நிலையில் மக்கள் நீதி மையக் கட்சியின் தலைவர் கமலஹாசன் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பாகவே ஒரு முடிவுக்கு வந்துவிட்டார். அந்த முடிவு டெல்லி பாராளுமன்றத்தில் ஒரு எம் பி ஆக தான் பதவியில் அமர வேண்டும் என்பது. இதற்கான அச்சாரத்தை அவர் எப்போதோ துவங்கி விட்டார் .முதல் அச்சாரம் போட்டவர் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். சினிமா தொடர்பு மூலமாக கமலஹாசனுக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கும் மிக நெருங்கிய நட்பு ஏற்பட்டு இருக்கிறது .இதன் மூலம் முதல்வர் மு க ஸ்டாலினிடம் தொடர்பு கொண்டு காங்கிரஸ் கட்சிக்கு கமலஹாசன் ஆதரவு தெரிவித்து, அதன் மூலம் கூட்டணியில் சேரும் திட்டம் தெரிவிக்கப்பட்டது.
இதன் அடிப்படையிலேயே கமலஹாசன் ராகுல் காந்தியை சந்தித்தார். தனது கோரிக்கையை அவர் முன் வைத்தார். அவரும் அதற்கு சம்மதம் சொன்னார் .எனவே வருகிற பாராளுமன்ற தேர்தலில் திமுக, காங்கிரஸ் ,மக்கள் நீதி மையக் கட்சி ஆகிய மூன்றும் கூட்டணி சேர்கிறது .இதில் தான் போட்டியிடும் தொகுதியாக கமலஹாசன் கோயம்புத்தூரை தேர்வு செய்து இருக்கிறார். அந்த அடிப்படையில் தான் கோயம்புத்தூரில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது .இந்த கூட்டத்தில் பேசிய கமலஹாசன் ராகுல் காந்தி தன்னிடம் கைபேசி மூலம் காலையில் பேசினார்.
கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சிவகுமாரை ஆதரித்து பிரசாரம் செய்யும படி கேட்டுக் கொண்டுள்ளார் நானும் அதன்படி உறுதி ஏற்க உள்ளேன் என தெரிவித்திருக்கிறார்.
எனவே அடுத்த வாரம் கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை ஆதரித்து கமலஹாசன் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார் .இந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பதிலடி கொடுக்க தற்காலிகமாக ஆள் இல்லாமல் திண்டாடும் திமுக இப்போது கமலஹாசனை தேர்ந்தெடுத்துள்ளது. இதற்கு பின்னணியில் ஒரு முக்கிய காரணம் இருக்கிறது.
பாஜக தலைவர் அண்ணாமலை வருகிற பாராளுமன்ற தேர்தலில் கோயம்புத்தூரில் போட்டியிடலாம் என முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது
இந்த சூழ்நிலையில் அண்ணாமலையையும் கமல்ஹானையும் மோத விட்டால் அரசியல் சூடு பிடிக்கும் என்பது திமுகவின் கணக்காக இருக்கிறது .
இதிலும் ஒரு சூட்சமம் இருக்கிறது. அண்ணாமலை திமுக சொத்து பட்டியல் குறித்து வெளியிட்ட தகவலால் ஏராளமான தலைவலி ஏற்பட்டிருக்கிறது. இதனை சமாளிக்க கமலஹாசனையும், அண்ணாமலையையும் ,மோதவிடலாம் என திமுக மேல்தரப்பு திட்டமிட்டு இருக்கிறது .
இது குறித்து கமலஹாசனிடம் நீங்கள் கோவையில் போட்டியிடுவீர்களா ? என்று கேட்டபோது “நல்ல விஷயம் தானே நடக்கட்டும் “என்று மழுப்பலாக ஒரு பதிலை கூறியிருக்கிறார்.
இதற்கு அண்ணாமலை தரப்பில் பதில் எதுவும் இல்லை. ஏனென்றால் கோவையில் அண்ணாமலை போட்டியிடுவதை பாஜக மேல் இடம் தான் முடிவு செய்ய வேண்டும். எனவே அவர் மௌனம் காக்கிறார்.
இந்தியன் படத்தில் வர்மக்கலை மூலமாக சண்டை போட்ட கமலஹாசன் இப்போது அண்ணாமலையுடன் நேரடி காட்சியில் இறங்கும் கால சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது.
அண்ணாமலைக்கும் வர்மக்கலை மட்டுமல்ல தமிழக அரசியலில் எல்லா கலைகளையும் தெரிந்த வித்தாகவே இருக்கிறார் .எனவே தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆரும், சாண்டோ சின்னப்பா தேவரும் போட்ட சிலம்பு சண்டை போல ,வருகிற பாராளுமன்ற தேர்தலில் சில பல நல்ல சண்டை காட்சிகளை வாக்காளர்கள் பார்த்து ரசிக்கலாம் என்பது இப்போதைக்கு ஜெம் டிவி தரும்,*நாரதர்* செய்தி ஆகும்