ஆந்திரா ஸ்டைல் காரசாரமான பச்சை மிளகாய் சட்னி!

Advertisements

பச்சை மிளகாய் என்றாலே எல்லோரும் காரமாக இருக்கும் என ஒதுக்கி விடுவார்கள். ஆனால், பச்சை மிளகாயில் பொட்டாசியம், மக்னீசியம், இரும்பு சத்து அதிகம் இருப்பதால் சீரான இதய துடிப்பிற்கும், இரத்த ஓட்டத்திற்கும் பயனுள்ளதாக உள்ளது. இந்தப் பச்சை மிளகாயை வைத்து ஆந்திராவில் பல விதமான உணவு வகைகள் தயார் செய்து வருகின்றார்கள். பச்சை மிளகாய் இல்லாமல் ஆந்திராவில் எந்த ஒரு உணவும் இருக்காது. அதுபோலப் பச்சை மிளகாய் காரசாரமான ஒரு சட்னி….

ஆந்திராவின் ராயலசீமாவிலும், குண்டூரிலும் இந்தக் கார சட்னி மிகவும் பிரபலமானதாகும். அந்த ஸ்டைல்ல சட்னியை நம்ப தமிழ்நாட்டில் செய்து கொடுத்தால் எப்படி இருக்கும்… எப்பவும் காலையில் இட்லி, தோசைக்கு வழக்கமான தேங்காய் சட்னி மற்றும் கார சட்னி செய்யாமல் இந்தப் பச்சை மிளகாய் சட்னி செஞ்சு கொடுத்துப் பாருங்க வேற லெவல்ல இருக்கும்.

காரசாரமான பச்சை மிளகாய் சட்னி செய்யத் தேவையானப் பொருட்கள்:

250 கிராம் பச்சை மிளகாய்

8 முதல் 10 பூண்டு

1 தேக்கரண்டி சீரகம்

1 சிட்டிகை மஞ்சள்

உப்பு தேவைக்கேற்ப

1 தேக்கரண்டி ஆப்பிள் சைடர் வினிகர்

எண்ணெய் தேவைக்கேற்ப

2 ஸ்பூன் தேங்காய் அல்லது நிலக்கடலை

 செய்முறை:

முதலில் பச்சை மிளகாயை நன்றாகக் கழுவி சிறிது நேரம் காய வைக்கவும். காய வைக்கும் முன் அவற்றைக் கத்தியால் கீறி விடவும்.

அதன்பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், காய வைத்த மிளகாயை போட்டு, நிறம் மாறத் தொடங்கும் வரை வறுக்கவும்.

பின்னர் சூடான கடாயில் பூண்டு, சீரகம், மஞ்சள் சேர்த்து நன்றாக வறுக்கவும்.

அவை நன்கு வறுத்தவுட்டன் அதனை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி ஆற வைக்கவும்.

அதன்பிறகு தேங்காய் மற்றும் வேர்க்கடலையை சேர்த்து பொன்னிறமாக, வாசனை வரும் வரை வறுக்கவும்.

பின்னர் அதையும் முழுமையாகக் குளிர வைத்து அதை மிக்சி ஜாருக்கு மாற்றவும்.

பின்னர் மிளகாய், உப்பு, வினிகர் மற்றும் கடாயில் மீதமுள்ள எண்ணெய்யை அதே ஜாரில் போட்டு அதனுடன் உப்பு சேர்த்து கரடுமுரடாக அரைக்கவும்.

இந்தக் கலவை காற்றுப்புகாத ஜாடியில் போட்டு ப்ரிட்ஜில் வைத்தால் ஒரு மாதம்வரை கூடக் கெட்டுப்போகாமல் இருக்கும்.

இதனை அப்படியே வெறும் சாதத்தில் போட்டு நல்லெண்ணய் ஊற்றிச் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

அதுபோலக் காலையில் இட்லி, தோசைக்கு இதனைச் சைடிஷாக வைத்துக்கொள்ள விரும்பினால் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் இஞ்சி, கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, சிறிதளவு எள் சேர்த்து தாளித்து அதில் இந்தச் சட்னியை ஊற்றி நன்கு கிளறி பரிமாறினால், சுவையான காரசாரமான ஆந்திரா ஸ்டைல் பச்சை மிளகாய் சட்னி தயாராகிவிடும்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *