Ameer Pavani: காதலனுடன் கிறிஸ்துமஸை கொண்டாடிய நடிகை!

Advertisements

பிக் பாஸ் நிகழ்ச்சிமூலம் காதலர்களாக மாறிய அமீரும், பாவனி ரெட்டியும் ஜோடியாகக் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடியபோது எடுத்த புகைப்படம் வைரலாகிறது.

விஜய் டிவி சீரியல்களில் நாயகியாக நடித்துப் பிரபலமானவர் பாவனி ரெட்டி. இவர் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் போட்டியாளராகக் கலந்துகொண்டார். அந்நிகழ்ச்சியில் வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்த அமீர், பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போதே பாவனியை துரத்தித் துரத்திக் காதலித்தார். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின்னரும் இருவரும் தங்கள் காதலை தொடர்ந்து வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் அமீரும், பாவனியும் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் ஜோடியாகப் பங்கேற்றனர். இந்த நடன நிகழ்ச்சியின்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது. இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் ஆனதையடுத்து இருவரும் லிவ்விங் டுகெதராக ஒரே வீட்டில் வாழத்தொடங்கினர்.

திருமணம் செய்துகொள்ளாமலேயே ஒன்றாக வசித்து வரும் அமீர் – பாவனி ஜோடி சினிமாவிலும் ஜோடியாக நடித்துள்ளனர். இந்த ஆண்டு அஜித் நடிப்பில் வெளிவந்த துணிவு படத்தில் அமீரும், பாவனியும் ஜோடியாக நடித்திருந்தனர். இதையடுத்து இவர்கள் கூட்டணியில் புதிய படம் ஒன்றும் தயாராகி வருகிறது.

அமீர் – பாவனி இருவருமே விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளனர். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த ஜோடி திருமணம் செய்துகொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், அமீர் – பாவனி ஜோடியின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.

கையில் ஒயின் கிளாஸ் உடன் படு நெருக்கமாகக் கட்டிப்பிடித்தபடி இருவரும் ஜோடியாகப் போஸ் கொடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றனர். அமீர் – பாவனி ஜோடியின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்களைப் பார்த்த நெட்டிசன்கள் திருமணத்துக்கு முன்னரே இவ்வளவு நெருக்கமா என வாயடைத்துப் போய் உள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *