ஜோதிட ரீதியாக குரு என்று சொல்லப்படும் வியாழ பகவான்தான் தங்கத்தின்
அதிபதியாகத் திகழ்கிறார். ‘பொன்னன்’ என்ற பெயரும் இவருக்கு உண்டு. இவரை
மையமாகக் கொண்ட சாஸ்திரப்படி மேஷ ராசிக்காரர்கள் ஞாயிறு வெள்ளி நகை
வாங்கலாம். ரிஷப ராசிக்காரர்கள் புதன் வெள்ளி நகை வாங்கலாம். மிதுனம்
ராசிக்காரர்கள் திங்கள் வியாழன் நகை வாங்கலாம். கடகம் ராசிக்காரர்கள்
ஞாயிறு,திங்கள், புதன் நகை வாங்கலாம். சிம்மம், மகரம் ராசிக்காரர்கள் புதன்
வெள்ளியும், கன்னி ராசிக்காரர்கள் சனிக்கிழமையும் துலாம் ராசிக்காரர்கள் திங்கள்
வெள்ளியும், விருச்சிகம் ராசிக்காரர்கள் சனிக்கிழமையும் தனுசு ராசிக்காரர்கள்
வியாழக்கிழமையும், கும்பம் ராசிக்காரர்கள் புதன், வெள்ளி, ஞாயிறு கிழமையும்
மீனம் ராசிக்காரர்கள் திங்கள், வியாழன் கிழமைகளில் நகை வாங்க நல்ல நாட்கள்.
இந்த கிழமைகளில் சித்தயோகம், சுப முகூர்த்தம் ஆகிய வேளையில் தங்க நகைகள்
வாங்க அதிகம் சேரும்.
12 ராசிக்காரர்களும் தங்கம் வாங்க நல்லநாட்கள்
Advertisements