
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிக நன்றாகவே அறிமுகமானவர் நடிகர் சரத்பாபு. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த முத்து அண்ணாமலை உள்பட தென்னிந்திய மொழிகளில் சுமார் 225 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
குண சித்திர நடிகரான இவர் 1971ஆம் ஆண்டு இயக்குனர் கே பாலச்சந்தர் இயக்கிய பட்டினப்பிரவேசம் படம் மூலம் அறிமுகமானவர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் .தமிழ். தெலுங்கு. கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்திருக்கிறார். தற்போது 71 வயதான இவர் கடந்த ஒரு மாத காலமாக ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறார் .

செம்பில் என்ற நோய் அவரைத் தாக்கியுள்ளது. இது ஒரு கொடூரமான நோயாகும் .இந்த நோயால் பாதித்தவர்கள் சிறுநீரக செயலிழப்புடன் நுரையீரலும் பாதிக்கப்படும் .வயிற்று வலி .வாந்தி பேதியால் திண்டாடுவார்கள் .ரத்த அழுத்தம் மிகக் குறைவாகி விடும். நுரையீரலையும் இந்த நோய் விட்டு விடாது. இப்படிப்பட்ட ஒரு கொடூரமான நோயின் பிடியில் நடிகர் சரத்பாபு சிக்கி உள்ளார்
அவருக்கு ஐ சி .யூ வாராடில் தீவிர சிகிச்சை நடைபெறுகிறது .
பல கட்டங்களில் கோமா நிலைக்கும் ஆளாகி விடுகிறார் .அவரது உயிரை பாதுகாத்து மீட்டுக் கொண்டு வர மருத்துவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
