
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே மஞ்சினி கிராமத்தில், அருள்மிகு ஸ்ரீ புத்துமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில், 17ம் ஆண்டு சித்திரைத் திருவிழா கடந்த 2ஆம் தேதி கணபதி ஹோமம், அம்மனுக்கு பூச்சாட்டுதல், காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து, அம்மனுக்கு பொங்கல் வைத்தல், சிறப்பு அலங்கார பூஜைகள் செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று மாலை மேளதாளங்கள் முழங்க அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.
இதில், 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். மஞ்சினி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.
