குடும்ப வாழ்க்கையில் சோதனையா?‘கும்பிட வேண்டிய தெய்வம் எது?

Advertisements

நானும் குட்டிக்கரணம் போட்டுத்தான் பார்க்கிறேன். ஆனால் 10 ருபாய் சம்பாத்தித்தால் 20 ரூபாய் செலவாகி விடுகிறதே என்று புலம்புகிறீர்களா? நான் தொட்ட காரியம் எதுவுமே துலங்கவில்லை.எனக்கு நேரம் சரியில்லை. நான் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என்று வருத்தப்படுகிறீர்களா? மனம் கலங்காதீர்கள். உங்கள் குல தெய்வத்திற்கு ஏதாவது நேர்த்திக் கடன் செலுத்துங்கள். எல்லாம் சரியாகிப் போய்விடும்

Advertisements

உலகில் எல்லலோருக்கும் மேலாக ஒரு சக்தி இருக்கிறது. அந்த சக்தி வேறு யாருமல்ல! அவரவர் குல தெய்வம்தான். குலதெய்வத்தின் அனுக்கிரகம் இல்லாமல் நீங்கள் என்னதான் “குட்டிக் கரணம்” போட்டாலும், நினைத்தது நடக்காது என்பது ஐதீகம். எத்தனை கோவில், குளம், ஏறி இறங்கினாலும் குல தெய்வ ஆசி இருந்தால்தான் மற்ற சாமிகளிடம் நீங்கள் வேண்டியது கிடைக்கும்.குலதெய்வம் என்பதன் பொருளே குல விருத்திக்கான கடவுள் என்பதுதான்.


நீங்கள் பணக்காரர் ஆக வேண்டுமா? நீங்கள் நினைத்த காரியம் நடக்க வேண்டும? எதுவாக இருந்தாலும் முதலில் குல தெய்வத்தை வணங்கி விட்டு மற்றதெல்லாம் பிறகுதான்.இதைக் காஞ்சிப் பெரியவரே சொல்லி இருக்கிறார்.”முதலில் வணங்க வேண்டியது குலதெய்வம். அடுத்தது நீங்கள் நினைக்கும் இஷ்ட தெய்வம். இதன் பிறகு நீங்கள் குடியிருக்கும் கிராமத்து அல்லது ஊர் தெய்வம்” என்கிறார் அவர்.திருமணம், பத்திரிகை வினியோகித்தல், புது வீடு கட்டுதல், புதிய தொழில் துவங்குதல் என எந்தக் காரியமாக இருந்தாலும் குல தெய்வ வழிபாடு அவசியம்.
குல தெய்வத்தை மதிக்காதவர் குடும்பம் வம்சா வழியாக அழிந்து விடும் என்கிறது ஜோதிடம். எத்தனையோ கோவில்களுக்குப் போகிறேன். நான் நினைத்தது நடக்கவில்லையே என்பதெல்லாம் இதனால்தான். நீங்கள் என்னதான் முயற்சி செய்தாலும் முடிவில் தோல்வியைத் தழுவி கஷ்டப்பட்டுக் கொண்டுதான் இருப்பீர்கள்.இதற்கு காரணம் குல தெய்வ நிபந்தனைதான்.குல தெய்வத்தை கும்பிடாதவனின் 7 சந்ததிகள் அழியும் என்கிறது ஐதீகம்.


இந்தக் குல தெய்வம் எங்கிருக்கும்..? உங்கள் முன்னோர்கள் எங்கு வாழ்ந்தார்களோ அங்குதான் குலதெய்வம் குடி இருக்கும்.உங்கள் தந்தைக்கு எது குலதெய்வமோ,அதுதான் உங்களுக்கும் குலதெய்வம். இது தாத்தா,தாத்தாவுக்கு தாத்தா என்று தொன்றுதொட்டு வம்சாவழியாக வணங்கப் பட்டு வரும் தெய்வமாகும்.


இந்தக் குல தெய்வப் பக்தர்களை உற்றுப் பார்த்தால் உங்களுக்கு ஒரு விஷயம் புலப்படும்? ஒரே சாமியை கும்பிட பல ஜாதிக்காரர்கள் வந்திருப்பார்கள். அதாவது குறிப்பிட்ட ஒரு ஜாதிக்கென ஒரே சாமி குல தெய்வமாக இல்லை.இதற்கு காரணம்? நமது முன்னோர்கள் அனைவரும் தமது சொந்தக் கிராமத்தில் உள்ள சாமியை ஊரோடு சேர்ந்து கும்பிட்டு வந்ததுதான் காரணம்!ஆகவே, உங்கள் குல தெய்வம் எந்த ஊரில் இருக்கிறதோ அந்த ஊரில்தான் உங்கள் முன்னோர்கள் குடியிருந்து இருக்கிறார்கள் என்பது விசேஷ தகவல்.
இப்படிப்பட்ட அபூர்வ சக்தி கொண்ட குல தெய்வம் உங்களுக்கு மிகப் பெரிய ஆசி வழங்கும் நாள் பங்குனி உத்திரத் திருநாள்! இந்தப் பங்குனி உத்திரத் திருநாளன்று எல்லோருடைய குல தெய்வங்கள் மீதும் சிவனாகப் பட்டவர் ஒடுங்குகிறார். அன்றைய தினம், அத்தனை குல தெய்வங்களும் சிவன் ரூப சக்தி பெற்று, பிரமாண்டமாக காட்சியளிக்கும் என்பது பக்தர்களுக்கு மெய் சிலிர்க்கும் தகவலாகும். இந்த சமயத்தில் நீங்கள் குல தெய்வத்தை வழிபட்டால் ஈசனாகப்பட்டவரே நேரில் வந்து உங்களுக்கு வரம் தந்து விடுகிறார்.நீங்கள் நினைத்தது நடக்கும். தொட்டது துலங்கும்.வெற்றி மேல் வெற்றி தேடி வரும்.


சிலர் குல தெய்வம் எது? என்பது கூடத் தெரியாமல் இருப்பார்கள். அவர்கள் தங்களது தந்தை.தந்தை வழி உறவினர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். கட்டாயம் உங்கள் குல தெய்வத்தை நீங்கள் கண்டுபிடித்துதான் ஆக வேண்டும்.
இவையல்லாமல் நீங்கள் எத்தனை பெரிய கோடீஸ்வரராக இருந்தாலும் சரி! குல தெய்வத்தை வணங்கவில்லையெனில் நீங்கள் மட்டுமல்லது உங்கள் குல வாரிசுகளும் நிம்மதி இழந்து கஷ்டங்களை சந்திக்க நேரிடும் என்கிறது ஜோதிடத் தகவல்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *