
நடிகர் அஜித்குமார் சினிமாவை தாண்டி கார் ரேஸ், போட்டோ கிராபி, துப்பாக்கி சுடுதல் என பல விஷயங்களில் தன்னை ஈடுப்படுத்தி வருகிறார்.. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த போதிலும், சினிமாவில் நடிப்பதற்கு இடையில், ரேஸுக்கென நேரம் ஒதுக்கி, அதில் கவனம் செலுத்தி வருகிறார்.
சமீபத்தில்தான் துபாயில் நடைபெற்ற 24H கார் பந்தயத்தில் தகுதிச்சுற்றில் பங்கேற்ற அஜித்குமார் ரேஸிங் அணி, 7வது இடத்தை பிடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. தொடர்ந்து 992 பிரிவு கார் பந்தயத்தில் 3வது இடத்தை பிடித்து சாதனை படைத்த அஜித்குமார் ரேஸிங் அணி இந்தியாவிற்கு பெருமையை தேடித்தந்தது.
அதனைத் தொடர்ந்து போர்ச்சுக்கல், ஜெர்மனியில் நடைபெற்ற கார் ரேஸில் கலந்து கொண்டிருந்தார் அஜித்.இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த வெள்ளகோவில் பகுதியில் கொங்கு நாடு ரைப்பில் கிளப் என்ற பெயரில் துப்பாக்கி சூடும் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் மூன்று இடங்களில் கிளை உள்ள நிலையில் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் உள்ள இந்த கிளைக்கு வருகை தந்த நடிகர் அஜித்குமார் அங்கு உள்ள வசதிகளை பார்வையிட்டு துப்பாக்கிச் சூடு பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.. இது குறித்த வீடியோவை அவரது உதவியாளர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இந்த வீடியோ தற்பொழுது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

