9-ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி  குறித்த பாடம் சேர்ப்பு.

Advertisements

பள்ளி மாணவர்கள் பாடப்புத்தகத்தில் கருணாநிதி தமிழுக்கு ஆற்றிய பங்களிப்பு குறித்த பாடம் இடம்பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisements

வரும் கல்வியாண்டில் 9-ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தமிழுக்கு ஆற்றிய பங்களிப்பு குறித்த பாடம் இடம்பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திமுக ஆட்சி காலத்தின் போது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி எழுதிய தமிழ் செம்மொழி பாடல் பள்ளி பாடப்புத்தகத்தில் இடம் பெற்றிருந்தது. இந்த நிலையில் தற்போது 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கருணாநிதி குறித்த ஒரு பாடம் பள்ளி பாடப்புத்தகத்தில் இடம் பெற உள்ளது.  அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசிய போது, கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு குறித்த பதிவுகள் பாடப்புத்தகத்தில் இடம் பெறும் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் வருகிற கல்வியாண்டில் ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் கருணாநிதி தமிழுக்கு ஆற்றிய சேவைகள், பங்களிப்புகள் குறித்த விரிவான தகவல்கள் இடம்பெற உள்ளதாக பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  இதற்கான பாடப்பகுதி இறுதி செய்யப்பட்டு புத்தகங்கள் தற்போது அச்சிடும் பணியில் இருப்பதாகவும், விரைவில் பாடப்புத்தகம் வெளிவரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *