முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதாத 800 பேனாக்கள் கொண்டு ஓவியர் வரைந்த கருணாநிதியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை திமுகவினர் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். ஆங்காங்கே நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்து வருகின்றனர். திமுக சார்பில் நூற்றாண்டு விழாவாக கொண்டாடப்பட உள்ளது.
இந்த நிலையில் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த பிரபல ஓவியர் வரைந்த ஓவியம் இணையத்தில் வைரலாகி வருகிறது. புதுச்சேரி மாநிலம் முதலியார்பேட்டையை சேர்ந்தவர் ஓவியர் குமார். தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றுள்ளார். இவர் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த 2 ஆண்டுகளாக சேமித்து வைத்த 800 பேனாக்கள் கொண்டு கருணாநிதியின் புகைப்படத்தை உருவாக்கி அசத்தியுள்ளார்.
இவர் உருவாக்கிய இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் திமுகவினர் வைரலாக்கி வருகின்றனர்