தமிழகம் முழுவதும் படித்து விட்டு வேலைக்காக காத்திருக்கும் நபர்களின் எண்ணிக்கை 67 லட்சமாக உயர்ந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் உள்ளது. இங்கு, தமிழகத்தை சேர்ந்த இளைஞர்கள் தங்கள் கல்வித்தகுதியை பதிவு செய்து வைத்து, அரசின் வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெறலாம். குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்கள் பதிவை புதுப்பிப்பதும் அவசியம். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களுக்கு அரசு பல்வேறு சலுகை மற்றும் பலன்களையும் வழங்கி வருகிறது. இவர்களுக்காக தனிப்பட்ட முறையில் வேலைவாய்ப்பு முகாம்களையும் நடத்துவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மார்ச் 31ம் தேதி நிலவரப்படி, வயது வாரியாக தமிழக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், மொத்தம் 67,33,560 பேர் தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். அதில், 35,98,639 பேர் பெண்களும், 31,34,644 பேர் ஆண்களும் உள்ளனர்.
அவர்களில், 17,92,383 பேர் 18 வயதிற்க்குட்பட்ட பள்ளி மாணவர்கள் என்றும், 28,65,095 பேர் 19 முதல் 30 வயதிற்குட்பட்ட கல்லூரி மாணவர்கள் என்றும், 18,36,760 பேர் 31 முதல் 45 வயதிற்குட்பட்டவர்கள் என்றும், 2,33,372 பேர் 46 முதல் 60 வயதிற்கு உட்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Weldone gem tv