
சென்னை, அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் மின்சார வாரிய தொழிற்சங்கங்களுடன் ஊதிய விகித உயர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. உடன் உயர் அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட 19 மின் வாரிய தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, அனைவருக்கும் 6 சதவீதம் ஊதிய உயர்வும், 10 ஆண்டு பணி முடித்தவர்களுக்கு கூடுதலாக 3 சதவீதம் ஊதிய உயர்வும் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.