Advertisements
நேபாள நாட்டில் 6 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் மாயமாகியுள்ளது. சொலுகும்புவில் இருந்து காத்மாண்டுவிற்கு சென்ற ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. இதையடுத்து ஹெலிகாப்டரை தேடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இமயமலை அடிவாரத்தில் அமைந்து இருக்கும் நாடான நேபாளத்தில் விமான விபத்துக்கள் அடிக்கடி நடைபெறும் என்பது கவனிக்கத்தக்கது.