500 மதுக்கடைகள் மூடப்படும் -அமைச்சர் செந்தில் பாலாஜி

Advertisements

தமிழகத்தில் இந்த ஆண்டு 500 மதுக்கடைகள் மூடப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.

Advertisements

தமிழ்நாடு அரசுக்கு அதிக வருவாய் தரும் துறைகளில் டாஸ்மாக் முதல் இடத்தில் உள்ளது. கடந்த 2003-04-ம் நிதி ஆண்டில் ரூ.3 ஆயிரத்து 639 கோடியே 93 லட்ச ரூபாயாக இருந்த டாஸ்மாக் வருவாய் 2022-23-ம் ஆண்டில் 44 ஆயிரத்து 98 கோடியே 56 லட்ச ரூபாயாக அதிகரித்து உள்ளது. அதே வேளையில் மது குடிக்கும் பழக்கத்தால் பல குடும்பங்கள் சீரழிவுக்கு காரணமாக அமைவதால் ‘டாஸ்மாக்’ கடைகளை மூட வேண்டும் கோரிக்கையும் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த நிலையில் தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மீதான மானிய கோரிக்கை மீதான விவாதத்தில், புதிய அறிவிப்புகளை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டார். அதில் இந்த ஆண்டில் 500 மதுக்கடைகள் மூடப்படும் என்று, மேலும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதியம் உயர்த்தப்படுவதாகவும் அவர் அறிவித்தார். இந்த அறிவிப்பை பொதுமக்கள் வரவேற்று உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *