ஸ்ரீபெரும்புதூரில் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆதிகேசவ பெருமாள் கோவில் சித்திரை தேரோட்ட விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து சாமிதரிசனம் செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஆதிகேசவ பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது.இந்த கோவிலில், அவதரித்த வைணவ மகான் ஶ்ரீ ராமானுஜரின் 1006ம் ஆண்டு அவதார விழா கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி தொடங்கி 26 ஆம் தேதி நடைபெற்று முடிந்து.
இதனைதொடர்ந்து, ஆதிகேசவ பெருமாளின் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா கடந்த 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில்,தினமும், மோகினி அவதாரம் தங்க பல்லக்கு, யாளி வாகனம், புஷ்ப பல்லக்கு உள்ளிட்ட வாகனங்களில் ஆதிகேசவ பெருமாள் எழுந்தருலிளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இந்நிலையில், ஆதிகேசவ பெருமாள் திருத்தேரோட்ட திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக 100க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த பட்டனர்.
இந்த தேரோட்ட நிகழ்சியில், ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வப் பெருந்தகை, விடுதலை சிறுத்தை கட்சி ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய கவுன்சிலர் தியாகு, ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி தலைவர் சாந்தி சதீஷ்குமார், பேரூராட்சி செயல் அலுவலர் ரவி, பேரூராட்சி துணைத் தலைவர் இந்திராணி சுப்பிரமணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்