தமிழ்நாட்டில் 25 உழவர் சந்தைகளில் தனியார் பங்களிப்புடன் தொன்மை சார் உணவகங்கள் அமைக்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
முதற்கட்டமாக, கோயம்புத்தூர், திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, மதுரை, நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருப்பூர், திருச்சி, வேலூர், சேலம் தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் தொன்மை சார் உணவகம் அமைக்கப்பட உள்ளது.
இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த வகையில், சிறுதானிய கூழ் வகைகள், சிற்றுண்டிகள், மூலிகை சூப் வகைகள் போன்ற உணவுகளை வழங்கி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும்,
சிறுதானிய உணவுகள் மற்றும் புவிசார் குறியீடு பெற்ற உணவுகளை மட்டுமே விற்பனைக்கு வைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உணவகத்திற்கு இலக்கிய நயம் சார்ந்த பெயர் சூட்டப்பட வேண்டும் உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.
அதிகாலை 4 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை விற்பனை செய்யலாம் என தெரிவித்துள்ள தமிழக அரசு, உணவு பாதுகாப்பு தர சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்றும், இயற்கைக்கு எதிரான நெகிழிப்பை, பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தக்கூடாது எனவும் தெரிவித்துள்ளது.